சர்வதேச டெஸ்ட் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டினார் கோஹ்லி
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடனான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்திருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் நாட்டிகம் மைதானத்தில் நேற்று துவங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் 35 ரன்களும், ராகுல் 23 ரன்களும் எடுத்து சுமாரான துவக்கம் கொடுத்தனர்.

இதன் பின் வந்த புஜாரா 14 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கோஹ்லி – ரஹானே கூட்டணி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு மளமளவென ரன் குவித்தது.
ரஹானே 81 ரன்களிலும், கோஹ்லி 97 ரன்களிலும் விக்கெட்டை இழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
இந்த போட்டியில் 97 ரன்கள் குவித்தன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் அயல்நாட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் வரிசையில் கோஹ்லி 1731 ரன்கள் குவித்து முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதே போல் அயல்நாடுகளில் அதிக ரன்கள் குவித்துள்ள இந்திய கேப்டன்கள் பட்டியல்;
1; விராட் கோஹ்லி – 1731 ரன்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனான விராட் கோஹ்லி அயல்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் வெறும் 19 போட்டிகளில்(30 இன்னிங்ஸ்) 1731 ரன்கள் குவித்து இந்த பட்டியலில் முதலிடத்தை உள்ளார்.
