அப்படி ஆடுவதெல்லாம் கிரிக்கெட்டா... சூரியகுமார் மாதிரி சுட்டுப்போட்டாலும் நான் ஆடமாட்டேன் - இதான் என்னோட பேட்டிங் டெக்னிக் என்று பேசிய விராட் கோலி! 1

“நான் ஒருபோதும் என்னுடைய பேட்டிங் டெக்னிக்கை மாற்றி மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் அடிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டேன். ஏனெனில்..” தனது சமீபத்திய பேட்டியில் பேசிய விராட் கோலி!

கிரிக்கெட் உலகில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறைகள் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களிடம் இருந்து வெளிப்படுகிறது.

சமீபகாலமாக அதிக அளவில் வித்தியாசமான ஷார்ட்களை விளையாடி மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் பந்துகளை அடிக்க வேண்டும் என்று பேட்ஸ்மேன்கள் துடிப்புடன் இருக்கின்றனர். உதாரணமாக கடந்த காலங்களில் டி வில்லியர்ஸ் மட்டுமே வித்தியாசமான ஷாட்டுகள் விளையாடி பவுலர்களை திணறடித்தார்.

அப்படி ஆடுவதெல்லாம் கிரிக்கெட்டா... சூரியகுமார் மாதிரி சுட்டுப்போட்டாலும் நான் ஆடமாட்டேன் - இதான் என்னோட பேட்டிங் டெக்னிக் என்று பேசிய விராட் கோலி! 2

சமீபகாலமாக கிட்டத்தட்ட ஒவ்வொரு அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் அவரைப்போன்ற வித்தியாசமான ஷாட்களை விளையாடுகின்றனர். அதில் பிரபலமாக இருப்பது சூரியகுமார் யாதவ். பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஸ்டம்ப் பின்திசையில் அதிக அளவில் அடிக்க முற்படுகின்றனர். ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடி பீல்டிங் கட்டுப்பாடுகளை தாண்டி பவுண்டரி அடிக்க முற்படுகின்றனர்.

சூர்யகுமார் யாதவ்

இப்படி பலரும் பல்வேறு விதமாக தங்களது பேட்டிங் அணுகுமுறைகளை மாற்றி விளையாடி வரும் நிலையில், ‘நான் என்னுடைய பேட்டிங்கை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டேன்! எனது பேட்டிங் அணுகுமுறை அனைத்துவித போட்டிகளிலும் இப்படித்தான் இருக்கும்.’ என்று தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் விராட் கோலி.

அப்படி ஆடுவதெல்லாம் கிரிக்கெட்டா... சூரியகுமார் மாதிரி சுட்டுப்போட்டாலும் நான் ஆடமாட்டேன் - இதான் என்னோட பேட்டிங் டெக்னிக் என்று பேசிய விராட் கோலி! 3

வித்தியாசமான ஷார்ட்களை விளையாட முயற்சிக்கும் ஆள் நான் இல்லை  வருடத்தின் 12 மாதங்களும் கிரிக்கெட் விளையாடுகிறோம். ஆகையால் நான் என்னுடைய டெக்னிக்கில் தெளிவாக இருக்கிறேன். வித்தியாசமான ஷாட்கள் விளையாடி விக்கெட்டுகளை பறிகொடுக்க் நான் விரும்பவில்லை. அணி வெற்றிபெற என்னிடம் இருக்கும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த நினைப்பேன். களத்தில் நின்று போட்டியை வெற்றி பெற்றுகொடுக்கும் பொழுது எனக்குள் அதிக நம்பிக்கை பிறக்கிறது. அதை நான் விரும்புகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் அதை செய்வதற்கு முற்படுகிறேன்.

அப்படி ஆடுவதெல்லாம் கிரிக்கெட்டா... சூரியகுமார் மாதிரி சுட்டுப்போட்டாலும் நான் ஆடமாட்டேன் - இதான் என்னோட பேட்டிங் டெக்னிக் என்று பேசிய விராட் கோலி! 4

ஒருபோதும் அனைத்து பக்கங்களிலும் அடிக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான ஷாட்களை ஆடுவதற்கு நான் விரும்புவதில்லை. ஐபிஎல் முடிந்த பிறகு உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட் வரவிருக்கிறது. ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு விதமாக விளையாடுவதில் நான் ஆர்வம் காட்டுவதில்லை. என்னிடம் இருக்கும் டெக்னிக்கை எவ்வளவு நேர்த்தியாக பயன்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவ முடியுமோ, அதை செய்ய விரும்புகிறேன்.” என்றார்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *