இந்திய அணிக்காக உலககோப்பைகள் வென்ற நட்சத்திர விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஒருவேளை ஓய்வு பெற்றால், அந்த இடத்தை நிரப்ப சரியான வீரர் ரிஷப் பண்ட் தான் என டெல்லி பயிற்சியாளர் கே.பி. பாஸ்கர் கூறுகிறார்.
தற்போது நடந்து கொண்டிருக்கும் ரஞ்சி டிராபி தொடரில் டெல்லி அணிக்கு கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட்டை, பலர் இவரது எதிர்காலத்தை பற்றி யோசிக்க தொடங்கி விட்டார்கள். 19 வயதிற்கு உட்பட்டோர்கள் உலகக்கோப்பையில் கடந்த வருடம் விளையாடிய ரிஷப் பண்ட், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த ரஞ்சி டிராபியில் 326 பந்துக்கு 308 ரன் அடித்த பிறகு தான் அவர் வெளிச்சத்திற்கு வந்தார். அதன் பிறகு ஜார்கன்ட் அணிக்கு எதிராக 48-பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் முதல்-நிலை கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
கடந்த ரஞ்சி ட்ராபி சீசனில் 8 போட்டிகளில் விளையாடிய ரிஷப் பண்ட், 4 சதம் மற்றும் சில அரைசதங்களுடன் 972 ரன் அடித்தார். அவர் உள்ளூர் போட்டியில் சிறப்பாக செயல் பட்டதால் இந்திய டி20 போட்டியில் இடம் கிடைத்தது. முதலில் இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு அழைத்தார்கள். மீண்டும் ஒரு முறை வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அழைத்தார்கள், ஆனால் ஏமாற்றிவிட்டார்.
மீண்டும் வெளிச்சத்திற்கு வர ரஞ்சி ட்ராபியில் சிறப்பாக செயல் பட முயற்சி செய்து வருகிறார். மூன்று இன்னிங்சில் ஒரு முறை கூட அவர் இன்னும் அரைசதம் அடிக்கவில்லை. ஆனால், தோனி சென்ற பிறகு சரியான வீரர் பண்ட் தான் என்று அவரது பயிற்சியாளர் கே.பி. பாஸ்கர் கூறுகிறார்.
“அவர் இன்னும் யார் என்று காண்பிக்கவில்லை. கண்டிப்பாக இது அவருக்கே தெரியும். அவர் அணியில் இல்லை, இதனால் மீண்டும் இடம் பிடிக்க கடினமாக உழைக்கிறார். அவர் கடந்த வருடம் எப்படி இருந்தாரோ அப்படியே தான் இருக்கிறார். பிட்டாகவும் மற்றும் விக்கெட்-கீப்பிங்கில் முன்னேறி வருகிறார். நான் ஏற்கனவே கூறியுள்ளேன் – இந்தியாவிற்கு விளையாடுவது எளிது, ஆனால் தொடர்ந்து விளையாட உன்னை தயார்படுத்தி கொள்ள வேண்டும். அவரிடம் வயது இருக்கிறது. முக்கியமாக அவர் ஒரு விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன். ஒருவேளை தோனி ஓய்வு பெற்றால், அந்த இடத்தை நிரப்ப பண்ட் தான் சரியான வீரர்,” என பாஸ்கர் கூறினார்.
“கிரீஸில் இருந்து பந்தை தடுப்பது அவரது ஸ்டைல் அல்ல. ஆட்டத்தின் போக்கையே சில ஓவர்களில் மாற்றி விடுவார். ஆனால், இந்திய அணிக்காக விளையாடும் போது ஷாட்டை தேர்வு செய்வது தான் முக்கியம். இதனால், பொறுப்பு தானாகவே வரும். கடந்த வருடம் 300 ரன் அடித்த பிறகு அதே வலிமையுடன் இருந்தார். ஸ்ரீகாந்த், சந்தீப் பட்டேல், கபில் தேவ் ஆகியோர் விளையாடுவது அவறுகளுடைய இயற்கையான விளையாட்டு. அதனை யாராலும் நிறுத்த முடியாது. இவரும் அதே போல் தான்,” என பாஸ்கர் மேலும் கூறினார்.