இந்த முன்னாள் ஜாம்பவானுக்கு இணையானவர் விராட் கோஹ்லி; முன்னாள் வீரர் புகழாரம் !! 1

இந்த முன்னாள் ஜாம்பவானுக்கு இணையானவர் விராட் கோஹ்லி; முன்னாள் வீரர் புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் கோலி இந்திய அணியை முன் நின்று வழிநடத்துகிறார். இதற்கிடையில் கோலியின் தன்னம்பிக்கை முன்னாள் கேப்டன் கபில் தேவிற்கு இணையாக உள்ளதாக ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில்,“நான் கபில் தேவ் உடன் விளையாடியுள்ளேன். தற்போதைய கேப்டன் விராட் கோலியை பார்க்கும் போது எனக்கு கபில் தேவ் நினைவுக்கு வருகிறார். கோலியிடம் கபில் தேவ் அளவு தன்னம்பிக்கை உள்ளது” என்றார். இதே போல முன்னாள் வீரர் லட்சுமண் கூறுகையில், “கோலியிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்றால் அது அவரின் ஆக்ரோஷம் தான். ஆனால் அவரிடம் ஒரு கவலை அளிக்கும் விஷயம் என்ன என்றால் அது அவரின் கட்டுப்படுத்த முடியாத குணம்” என்றார்.

இந்த முன்னாள் ஜாம்பவானுக்கு இணையானவர் விராட் கோஹ்லி; முன்னாள் வீரர் புகழாரம் !! 2

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் கோலி மிகச்சிறந்த வீரராக உள்ளார். இதற்கு போட்டியை மாற்றும் திறன் கொண்ட வீரராக கோலி உள்ளதே காரணம். சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் கோலியின் சராசரி 50 க்கு மேல் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 7240 ரன்கள் (53.62 சராசரி) அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 11,867 ரன்கள் (கிட்டத்தட்ட 60 சராசரி) அடித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *