2011 உலகக் கோப்பையில் இந்த வீரர் செயல்பட்டதுபோல் 2023 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி செயல்படுவார் ; பாராட்டி பேசிய முன்னாள் வீரர்..
2011 உலகக்கோப்பை தொடரில் எப்படி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இந்த வீரர் செயல்பட்டாரோ.. அதேபோன்று 2023 உலக கோப்பை தொடரில் விராட் கோலி செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ஐசிசி நடத்தும் 13வது 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்திய அணி நிர்வாகம் நடத்தும் நான்காவது உலகக் கோப்பை தொடர் இதுவாகும்.
கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. அதன் பிறகு நடந்த இரண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி ஏமாற்றத்தையே தந்தது. இந்த வருட உலககோப்பையில் அப்படி நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
பிசிசிஐ-யின் மோசமான திட்டம்…
ஆனால் இந்த முன்னேற்பாடுகளில் பல குளறுபடிகள் உள்ளதாக தெரிகிறது. உலகக்கோப்பை தொடரின் 20 பேர் கொண்ட வீரர்களை சுழற்சி முறையில் விளையாட வைப்பது, சீனியர் வீரர்களை ஓரம் கட்டுவது போன்ற விஷயங்கள் சரியான முடிவு இல்லை என கிரிக்கெட் வல்லுனர்கள் விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக,உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதற்கு இன்னும் பத்து மாதங்களை இருக்கும் இந்த நிலையில் இந்திய அணி, விராட் கோலி ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஓய்வுகளை கொடுத்துக் கொண்டே வருகிறது.
பிசிசிஐயின் இந்த முடிவு சீனியர் வீரர்களை முற்றிலுமாக ஓரம் கட்டி விட்டு இளம் வீரர்கள் கொண்ட படையை உலகக்கோப்பை தொடரில் களமிறக்கப் போகிறதா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்து வருகிறது.
விராட் கோலி இல்லாமல் உலகக் கோப்பை தொடரை எதிர்கொள்வது மோசமான திட்டம்..
ஆனால் விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இந்திய அணியில் இடம் பெறாமல் போனால் அது உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று இர்பான் கௌதம் கம்பீர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்வரும் 2023 ஒரு நாள் உலக கோப்பை தொடரில் விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என விராட் கோலி மீதான தன்னுடைய ஆதரவை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஶ்ரீகாந்த் தெரிவித்ததாவது, “1983 உலகக் கோப்பை தொடரை வென்றது, என் வாழ்க்கையில் மிகச் சிறந்த தருணமாகும். உலகக்கோப்பை தொடரில் விளையாடிய வீரராகவும், இந்திய அணியின் தேர்வு குழுவின் தலைவராகவும் செயல்பட்ட நான்., 2011 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெற்றி பெற்ற கதையை நான் என் பேரக்குழந்தைகளுக்கு கதையாகச் சொல்வேன். 2011 உலகக்கோப்பை தொடரில் கௌதம் கம்பீரின் ஆட்டம் மிக சிறப்பானதாக இருந்தது. இந்திய அணிக்கு அவர் கோப்பையை வென்று கொடுத்ததை நினைத்து பெருமைப்படுவதுடன் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த தொடர் முழுவதும் கௌதம் கம்பீர் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார் அதேபோன்று நிச்சயம் எதிர்வரும் 2023 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்”.
“எப்படி 2011 உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கு மிக முக்கிய காரணங்களில் கௌதம் கம்பீர் ஒருவராக திகழ்ந்தாரோ.. அதேபோன்று நிச்சயம் விராட் கோலி திகழ்வார். மேலும் இந்திய அணி இடம் பெற்றிருக்கும் இஷான் கிஷன் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்படுவதற்கும் விராட் கோலி உறுதுணையாக இருப்பார்” என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.