அறிமுக போட்டியில் ஜடேஜா நிகழ்த்திய சாதனையை வெறும் 2 ரன்களில் தவற விட்டிருக்கிறார் க்ருனால் பாண்டியா.
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கினார் பாண்டியா சகோதரர்களில் ஒருவரான க்ருனால் பாண்டியா. 41வது ஓவரில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்த பிறகு ஏழாவது வீரராக பேட்டிங் செய்ய வந்த க்ருனால் பாண்டியா துவக்கம் முதலே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கினார்.
இது இவருக்கு முதல் ஒருநாள் போட்டியைப் போலவே தெரியவில்லை. அந்த அளவிற்கு லாவகமாக இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசினார். இவர் வெறும் 26 பந்துகளில் அரைசதம் கடந்து, அறிமுக ஒருநாள் போட்டியில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை முதலில் படைத்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்த பாண்டியா 31 பந்துகளில் 58 ரன்கள் அடித்திருந்தார்.
இதற்கு முன்னர், 2009ஆம் ஆண்டு ஒருநாள் அறிமுகமான ஜடேஜா, 7 அல்லது அதற்க்கு கீழ் வரிசையில் களமிறங்கி அறிமுக போட்டியில் 60 ரன்கள் அடித்ததே தற்போதுவரை அதிகபட்சமாக இருக்கிறது. முதல் போட்டியில் 7வது வீரராக களமிறங்கி, வெறும் 2 ரன்களில் ஜடேஜாவின் 12 வருட சாதனையை சமன் செய்யவோ அல்லது 3 ரன்களில் முறியடிக்கவோ க்ருனால் பாண்டியா தவறிவிட்டார்.
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி துவக்கத்தில் ரன்களை வாரி கொடுத்தாலும் பின்னர் தாக்கூர் மற்றும் பிரஷித் கிருஷ்ணா இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து வீரர்களை 251 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து 66 ரன்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியை வென்றது. இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அறிமுக போட்டியில் 7 அல்லது அதற்க்கு கீழ் வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியல்:
Highest Score for India on debut batting at 7 or below:-
60: Ravindra Jadeja (2009)
58: Krunal Pandya (2021)
55: Saba Karim (1997)
47: Azharuddin (1985)
44: Vinoo Mankad (1974)#INDvENG— ComeOn Sports 🇮🇳 (@ComeOn_Sports) March 23, 2021