பரோடா அணிக்காக ஆடும் ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியா 2016/17 ம் ஆண்டுக்கான லாலா அமர்நாத் விருதை பெற்றார். இதற்கு ட்விட்டரில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துளார்.
ரஞ்சிக்கோப்பையில் பரோடா அணிக்காக ஆடி வருகிறார் க்ருனால் பாண்டியா. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை அவ்வப்போது நிரூபித்து காட்டிக்கொண்டும் இருக்கிறார். ஐபில் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் இவரின் செயல்பாடு பேட்டிங் பௌலிங் இரண்டிலும் சிறப்பாகவே இருக்கும். மும்பை அணி ஐபில் ஏலத்தில் க்ருனால் பண்டியாவை 8.8 கோடிக்கு ஏலம் எடுத்தது.
அதைப்போலவே, க்ருனால் பாண்டியா 2018ம் ஆண்டு ஐபில்லில் 228 ரன்களும் 12 விக்கெட்டுகளும் எடுத்து சிறப்பாக செயல்பட்டுள்ளார். தற்போது இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ள இவர் இந்திய அணியில் இடம்பெற முயற்சி செய்து வருகிறார்.
2016/17 ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பையில் பரோடா அணிக்கு சிறப்பாக ஆடியதால் பிசிசிஐ நிர்வாகம் க்ருனால் பாண்டியாவிற்கு லாலா அமர்நாத் விருது அறிவித்தது. க்ருனால் பாண்டியா இந்தியா ஏ அணியுடன் இங்கிலாந்து சென்றதால் இவருக்கு பதிலாக இவரது சகோதரர் ஹார்திக் பாண்டியா பெற்றுக்கொண்டார்.
Photo by Rahul Gulati – Sportzpics – IPL
இருவரும் மும்பை அணிக்காகவும், ரஞ்சியில் பரோடா அணிக்காகவும் ஒன்றாக ஆடுகின்றனர். க்ருனால் பாண்டியா போலவே ஹார்திக் பாண்டியாவும் மும்பை அணிக்கு சிறப்பாக ஆடினார். 13 போட்டிகளில் 260 ரன்களும் 18 விக்கெட்டுகளும் வீழ்த்தி சிறப்பான ஆல்ரவுண்டர் ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
Belief and Hardwork! Delighted to receive the Lala Amaranth award for the 16-17 season. Thank you for your part in my journey, @hardikpandya7 Couldn’t be a better person to receive it on my behalf. Thank you, @BCCI
இதனால், ட்விட்டரில் க்ருனால் பாண்டியா நெகிழ்ச்சியுடன், இந்த விருதை எனக்கு பதிலாக வாங்குவதற்கு ஹார்திக் தவிர வேறு எவரும் சரியானதாக இருக்க மாட்டார்கள் என தெரிவித்தார். மேலும், இந்த விருதினை எனக்கு அளித்த பிசிசிஐ க்கு நன்றி எனவும் தெரிவித்தார்.