தற்போது தென்னாபிரிக்காவில் இருக்கும் இந்திய அணி, தென்னாபிரிக்கா அணியை முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வீழ்த்தி அசத்தி இருக்கிறது. இந்நிலையில், தென்னாபிரிக்காவில் ஒருநாள் தொடரை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் 304 ரன் இலக்கை துரத்திய தென்னாபிரிக்கா அணி, தொடக்கத்திலேயே ஆம்லா விக்கெட்டை பறிகொடுத்தது. ஆனால் டுமினி மற்றும் மார்க்ரம் ஜோடி 78 ரன் சேர்த்தது. அதன் பிறகு சஹால் மற்றும் குல்தீப் ஜோடி எதிரணியை துவம்சம் செய்தது. இதனால், தென்னாபிரிக்கா அணி 124 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்த்ர சஹால் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
இந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை பார்த்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியே அசந்து போனாராம். “அவர்களை பற்றி கூற எனக்கு வார்த்தை இல்லை. அவர்கள் எதிரணியை துவம்சம் செய்துவிட்டார்கள். அதை நம்ப முடியவேயில்லை. அவர்கள் இருவருமே கடினமாக உழைக்கிறார்கள் . எப்படி பந்துவீச வேண்டும், எந்த விதமான பீல்டிங் வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஆனால், நான் இப்போது சந்தோசமாக இருக்கிறேன்,” என விராட் கோலி கூறினார்.
“அவர்கள் மரண பார்மில் இருக்கிறார்கள். எந்த விதமான பிட்சாக இருந்தாலும் போட்டியை மாற்ற கூடிய திறமை உள்ளவர்கள். அவர்கள் ஓவருக்கு 6 ரன் கொடுத்தாலும், 3 அல்லது 4 விக்கெட் எடுப்பார்கள் என்று எனக்கு தெரியும். கடந்த இரண்டு போட்டிகளிலும் அவர்கள் சிறப்பாக செயல் பட்டு, இரண்டு போட்டியையும் திருப்பியிருக்கிறார்கள்.”
“அவர்கள் ஒவ்வொரு ஓவரின் போது பேட்ஸ்மேனை பற்றி இரண்டு முறை கேட்பார்கள். இதுவரை நான் அதுபோல் பார்த்ததில்லை. ஒவ்வொரு ஓவரில் 2 விக்கெட் எடுப்பார்கள். அதனால் தான் எங்கள் அணி அவர்களை நம்பி இருக்கிறது. அடுத்த போட்டியில் அவர்கள் 70 ரன்னுக்கு கொடுக்கலாம். அதில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை, ஆனால் அவர்கள் கண்டிப்பாக 2-3 விக்கெட் எடுப்பார்கள். இது போல் சூழ்நிலையில் விளையாடி கொண்டே, அடுத்த உலகக்கோப்பையில் விளையாட இருக்கிறோம்.”
“இந்த தொடர் முடிய இன்னும் மூன்று போட்டிகள் இருக்கிறது. இது வரை எப்படி விளையாடினோமோ, அதே போல் விளையாட வேண்டும். இந்த தொடரை கூடிய விரைவில் வெல்ல வேண்டும். தற்போது நாங்கள் 3-0 வில் இருக்கிறோம், இனி நாங்கள் தொடரை இழக்கமாட்டோம். கண்டிப்பாக இந்த தொடரில் எதிரணியை வைட்வாஷ் செய்ய நினைப்போம்,” என விராட் கோலி கூறினார்.