விராட் கோலி, ரோஹித் சர்மா கிடையாது, இந்திய அணியின் தங்க துகள் இந்த வீரர் தான் ; முன்னாள் வீரர் பாராட்டு..
குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு கிடைத்த தங்க துகள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒருவராக திகழ்ந்த இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் குல்தி யாதவ., முக்கியமான கட்டத்தில் 3 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணி எளிதாக வெற்றி பெறுவதற்கு வழிவகை செய்தார்.

இதன் மூலம் 30 டி20 போட்டிகளில் பங்கேற்று 50 விக்கெட் வீழ்த்தி மகத்தான சாதனை படைத்த குல்திப் பயாதவை லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணி, ரெகுலராக விளையாடவைக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வட்டத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக 2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருப்பதால் அதற்கான இந்திய அணியில் குல்தீப் யாதவை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் இந்திய அணிக்கு அறிவுரை கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்மான ஆகாஷ் சோப்ரா., ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் குல்தீப் யாதவை இந்திய அணியில் விளையாட வைத்தால் அது இந்திய அணிக்கு பலமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

அதில்., குல்தீப் யாதவ் நிச்சயம் இந்திய அணியின் முதுகெலும்பாக உள்ளார்.அவர் சற்று வித்தியாசமாக செயல்படுகிறார்.சற்று வித்தியாசமாக பார்த்தோம் என்றால்,உதாரணமாக இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் டி.20 உலகக் கோப்பை எதிர் கொள்ளுமேயானால், இந்திய அணிக்கு அணிக்கு விக்கெட் வீழ்த்தி கொடுக்கும் குல்தீப் யாதவ் போன்ற ஒரு பந்து வீச்சாளர் தேவை”.
அவர் டி.20 போட்டியில் விளையாடிய விதம் விக்கெட்டை வீழ்த்துவதற்கு மிகவும் முக்கியமானது,உங்களிடம் விக்கெட்டை வீழ்த்தும் திறமை படைத்த ஒருவர் இருந்தால் அது நமக்கு மிகவும் பலமனாதக இருக்கும், குல்தீப் யாதவ் இந்திய அணியின் தங்க துகள்,அவர் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்படுவார்.அவர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானவர் ”என்று குல்தீப் யாதவ் குறித்து ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருந்தார்.

குல்திப் யாதவ் 84 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 141 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.