குல்தீப் யாதவ் நீக்கப்பட்டதற்கு இது மட்டும் தான் காரணம்; கேப்டன் விராட் கோஹ்லி ஓபன் டாக் !! 1

குல்தீப் யாதவ் நீக்கப்பட்டதற்கு இது மட்டும் தான் காரணம்; கேப்டன் விராட் கோஹ்லி ஓபன் டாக்

டெஸ்ட் அணியில் ஆடும் லெவனில் இளம் வீரர் ஒருவர் எடுக்கப்படாததற்கான காரணம் என்னவென்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் அபாரமாக செயல்பட்டது. பும்ரா இல்லாமலேயே இந்திய அணி பவுலிங்கில் அசத்தியது.

முதல் இன்னிங்ஸில் அஷ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை சுருட்ட உதவினார். ஸ்பின்னிற்கு சாதகமான விசாகப்பட்டின ஆடுகளத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்பின்னர்கள் பெரிதாக சோபிக்காத போதிலும், மந்தமான அந்த பிட்ச்சில் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷமி மிரட்டினார். இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாகவும் அவர் திகழ்ந்தார்.

குல்தீப் யாதவ் நீக்கப்பட்டதற்கு இது மட்டும் தான் காரணம்; கேப்டன் விராட் கோஹ்லி ஓபன் டாக் !! 2

இவ்வாறாக ஸ்பின் பவுலர்கள் மற்றும் ஃபாஸ்ட் பவுலர்கள் என இருதரப்புமே அசத்தியது. இந்திய அணியின் பிரைம் ஸ்பின்னர்களான அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும்தான் தென்னாப்பிரிக்க தொடரில் ஆடிவருகின்றனர். அவர்கள் இருவரும் ஆடுவதால், அணியில் இருந்தும்கூட குல்தீப்பிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பதில்லை.

இந்நிலையில், குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படாதது குறித்து விளக்கமளித்த கேப்டன் கோலி, எந்த வீரருமே தனிப்பட்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அணிக்கு எந்தவகையில், சிறப்பான பங்களிப்பை செய்யமுடியும் என்று மட்டுமே சிந்திக்கின்றனர். குல்தீப் விஷயத்திலும் அதுதான். இந்தியாவில் ஆடும்போது அஷ்வினும் ஜடேஜாவும்தான் இந்தியாவின் முதன்மை தேர்வு என்பது குல்தீப்பிற்கும் தெரியும். அஷ்வினும் ஜடேஜாவும் பேட்டிங்கும் நன்றாக ஆடுவார்கள் என்பதால் இந்தியாவில் ஆடும் போட்டிகளில் அவர்களைத்தான் எடுப்போம் என்பது குல்தீப்புக்கு தெரிந்த விஷயம்தான் என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *