தற்போதைய சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் சொல்லப்போனால் தோனி தான் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர். அவருடைய அற்வுரைகளை ஏர்று செயல்படாதோர் வெகு சிலரே.
இந்திய கேப்ட விராத் கோலி கூட, தடுமாறும் சில சமயங்களில் மைதானத்தில் தோனியின் அறிவுரைக்காக விரைவார். ஆனால், இளம் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்க்கு தோனியின் அறிவுரைகளை கேட்பது பிடிக்கவில்லை போலும்..
இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் பந்து வீசிக் கோண்டிருக்கும் போது கிட்டத்தட்ட வெற்றி முடிவாகியிருக்கும் நிலையில் மேஸ்வெல், ஆடக்ளத்தில் திடீரென வந்து குல்தீப் யாதவ் பந்தை பதம் பார்க்க ஆட்டம் சூடு பிடிக்க்த் துவங்கியது.
10 ஓவர்களில் 45 ரன்னிற்க்கு 4 விக்கெட்டுக்ளை இகழந்திருந்தது ஆஸ்திரேலிய அணி. அடுத்த ஓவரை வீச வந்தார் இளம் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்.
அந்த ஓவரை எதிர் கொண்டது அதிரடி வீரர் மேக்ஸ்வெல்.
அவர் வந்தவுடனேயே ஸ்டப்பின் பின்னல் இருந்து குல்தீப் யாதவிற்க்கு ஸ்டம்பை விட்டு விளகி உள்ளே வீசும் படி கூறிகிறார் தோனி.
ஆனால், அதை பொருட்படுத்தாமல், குல்தீப் யாதவ் தன்போக்கில் மிடில் ஸ்டம்ப் லைனில் அந்த பந்தை வீசுகிறார், சொல்லி வைத்தாற் போல் அந்த பந்தை சிக்சருக்கு தூக்கி வீசுகிறார் மேக்ஸ்வெல்.
மீண்டும் அடுத்த பந்தை தான் கூறியவாறு வீசிச் சொல்கிறார் தோனி. ஆனால், மீண்டும் தன் விருப்பம் போல் வீச அது சிக்சருக்கு பறக்கிரது.
பின்னர் தோனி, இல்லை இல்லை இப்படி வீசக்கூடது இந்த அள்விற்க்கு உள்ளே வீசக் கூடாது என்கிறார். ஸ்டம்ப் லைனில் இவருக்கு வீசக் கூடாது, நன்றாக விலக்கி உள்ளே வைக்க வேண்டும் என குல்தீப் யாதவிடம் ஓடிச் சென்று கூறுகிறார்.
அதனையும் செவி சாய்க்காத குல்தீப் யாதவ், கடைசி பந்தை கூக்லியாக வீச சிங்கிலுடம் ஓவரை முடித்துச் செல்கிறார்.
அடுத்த ஓவரே யுஜவேந்திர சகால் தோனி சொன்னது தோனி விளக்கி உள்ளே வைத்து மேக்ஸ்கெல்லின் விக்கெட்டை அழகாக எடுத்துவிடுகிறார்.
இதனைப் பார்த்த குல்தீப் யாதவிற்க்கு கண்டிப்பாக தோனியைன் பேச்சைக் கேட்டிருந்தால் விக்கெட் எடுத்திருக்கலாம் என மூக்கருபட்டு போயிருப்பார்.