அவனுகள காலி செய்ய இத மட்டும் பன்னுங்க; இங்கிலாந்து அணிக்கு டிப்ஸ் கொடுக்கும் சங்ககாரா !! 1

அவனுகள காலி செய்ய இத மட்டும் பன்னுங்க; இங்கிலாந்து அணிக்கு டிப்ஸ் கொடுக்கும் சங்ககாரா

2017-18 ஆஷஸ் தொடரில் ஆஸி. 4-0 என்று வெற்றி பெற்ற போது ஸ்டீவ் ஸ்மித் 5 போட்டிகளில் 687 ரன்களை 137.40 என்ற சராசரியில் எடுத்து சாதனை புரிந்திருந்தார். டேவிட் வார்னர் தன் பங்கிற்கு 441 ரன்களை 63 என்ற சராசரியின் கீழ் எடுத்தார்.

இந்நிலையில் ஆஷஸ் தொடர் எட்ஜ்பாஸ்டனில் தொடங்கவுள்ள நிலையில் இலங்கை முன்னாள் விக்கெட் கீப்பர் / கேப்டன் சங்கக்காரா இவர்கள் இருவரையும் வீழ்த்துவது எப்படி என்று ஸ்கை ஸ்போர்ட்ஸுக்கு தெரிவித்ததாவது:

அவனுகள காலி செய்ய இத மட்டும் பன்னுங்க; இங்கிலாந்து அணிக்கு டிப்ஸ் கொடுக்கும் சங்ககாரா !! 2

டேவிட் வார்னருக்கு,  பந்துகளை ஸ்டம்ப் லைனிற்குள் பிட்ச் செய்ய வேண்டும், மிடில் அண்ட் லெக் திசையில் பிட்ச் செய்து பந்தை அவருக்குக் குறுக்காக வெளியே எடுக்க வேண்டும். வார்னர் ஒரு பழைய பாணி டெஸ்ட் ஓபனர் கிடையாது என்பதால் அவர் கால்களை அதிகம் நகர்த்த மாட்டார். ஒரு நாள் போட்டி போல் பந்தைப் பார் அடி என்ற வகை வீரர் அவர். அதுவும் மேகமூட்ட வானிலையில் பந்துகள் ஸ்விங் ஆகும் போது இந்த லைனில் வீசினால் அவரது பின்னங்கால் லெக் ஸ்டம்ப் லைனுக்கு நகரும் இதனால் பந்துகள் அவரைக் குறுக்காக கடக்கும் போது, பந்துகள் லெந்த் பந்தாக இருந்தாலும் லெந்த்துக்கு சற்று பின்னால் பிட்ச் ஆனாலும் சரி அவர் தன் முன் காலை பந்தின் திசையிலிருந்து விலக்கிக் கொள்வார். அதனால் பந்தை ஆடவே பார்ப்பார், ஆனால் அவரது இந்த நகர்வினால் அவரது முன் தோள் அவரது கண்ணுக்கும் பந்துக்குமான திசையை சற்றே மறைப்பதால் அந்த இடம் அவருக்குக் குருட்டுப் புள்ளியாக அமையும்.  ஷார்ட் பிட்ச் பந்துகளும் இந்த குருட்டுப் புள்ளி இடத்தில் உதவும், வார்னர் நிச்சயம் இந்த லைனில் திணறுவார். அவரை வீழ்த்தி விடலாம்.

இலங்கைக்கு எதிராக அவர் ஆடும் போது டி20யில் கூட நாங்கள் அந்த இடத்தில் வார்னருக்கு வீசுமாறு பேசிக்கொள்வோம்.  இங்கிலாந்தில் டியூக் பந்துகள் இன்னும் கூடுதல் கடினத் தன்மையுடன் இருக்குமாதலால் ஸ்லிப் திசையில் உஷார் நிலையும் ஷார்ட் பாயிண்டும் உதவும்.

அவனுகள காலி செய்ய இத மட்டும் பன்னுங்க; இங்கிலாந்து அணிக்கு டிப்ஸ் கொடுக்கும் சங்ககாரா !! 3

ஸ்டீவ் ஸ்மித், எந்த வகையான பந்தாக இருந்தாலும் பெக் அண்ட் அக்ராஸ் உத்தியை கடைபிடிப்பார், அதாவது பின் காலை ஆஃப் ஸ்டம்புக்கு நகர்த்தி கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே அவர் பந்து வீசுவதற்கு முன்பாக நிறைய சேஷ்டைகளைச் செய்வார். அவரது மட்டை பெரும்பாலும் கல்லியிலிருந்து வரும். அவரது நகர்வுகள் சீரற்ற முறையில் இருந்தாலும் இவரும் ரன்கள் எடுக்கவே பெரும்பாலும் பார்ப்பார் என்பதால் விக்கெட் விழும் வாய்ப்பு அதிகம்.

இவர் கிரீசில் ஒரு முனைக்கு அதிகம் நகர்ந்து ஆடுவதால் லெக் கல்லி, அல்லது லெக் ஸ்லிப்பை அவர் இறங்கியவுடன் நிறுத்தினால் கேட்ச் வர வாய்ப்புள்ளது” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *