கோலி கூட இத யோச்சிருப்பாரானு தெரியல. ஆனா தேவதத் படிக்கல் செஞ்ச இந்த ஒன்னு தான் சதத்திற்கு காரணம் ! குமார் சங்கக்காரா பாராட்டு
14வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 18 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இன்று இரண்டு போட்டிகள் நடத்த உள்ளது.
மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் 19வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறது.

இந்நிலையில், கடந்த 22ம் தேதி நடைபெற்ற 16வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் விராட் கோலி மற்றும் தேவதத் படிக்கல் ஆரம்ப முதல் இறுதி வரை பார்ட்னர்ஷிப் அமைத்து 181 ரன்கள் குவித்து போட்டியை வென்றனர். இதில் தேவதுத் படிக்கல் சதம் விளாசி (101) இருக்கிறார். படிக்கலின் இந்த அதிரடியான ஆட்டத்தை கிரிக்கெட் முன்னாள் வீரர்கள், வல்லுநர்கள், ரசிகர்கள் என அனைவரும் இவரை பாராட்டு வந்தனர்.

இந்நிலையில், அந்த போட்டி முடிவடைந்த பிறகு ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா படிக்கலை பாராட்டி பேசியிருக்கிறார். அவர் பேசுகையில் ” தேவதத் படிக்கல் சிறப்பாக விளையாடினார். இவர் ராஜஸ்தான் பவுலர்கள் எப்படி பந்துவ வீசப் போகிறார்கள் என்பதை அவர்களது பீல்டிங் செட்டப்பை வைத்தே கணித்து விட்டார்.
அவர் எல்லா பந்தையும் நிதானமாக எதிர்கொண்டார். இவரிடம் புத்திசாலி தனமும் வெளிப்பட்டது. எதிர் திசையில் இருந்த விராட் கோலியும் இவருக்கு தொடர்ந்து டிப்ஸை கொடுத்து வந்திருக்கிறார். படிக்கல் கண்டிப்பாக இந்திய அணியில் கூடிய விரைவில் இடம்பிடிப்பார்” என்று பாராட்டி இருக்கிறார்.
