வெற்றியின் விளிம்பிற்கு சென்று கைவிட்ட ஜிம்பாப்வே! தொடரை கைப்பற்றிய இலங்கை! 1

ஹராரேயில் நடைபெற்று வந்த ஜிம்பாப்வே – இலங்கை இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்ததால் இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.

ஜிம்பாப்வே – இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் ஹராரேயில் நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 406 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 293 ரன்னில் சுருண்டது.

முதல் இன்னிங்சில் 113 ரன்கள் முன்னிலை பெற்றதால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தோடு ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் ஜிம்பாப்வே அணியால் அதிக நேரம் விளையாட முடியவில்லை. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் அடித்திருந்தது.

வெற்றியின் விளிம்பிற்கு சென்று கைவிட்ட ஜிம்பாப்வே! தொடரை கைப்பற்றிய இலங்கை! 2
Sri Lanka bartsman Kusal Mendis plays a shot during their cricket test match against Zimbabwe at Harare Sports Club, in Harare, Friday, Jan. 31, 2020. (AP Photo/Tsvangirayi Mukwazhi)

இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. ஜிம்பாப்வே 247 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. 361 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. ஆனால் 3-வது வீரராக களம் இறங்கிய மெண்டிஸ் சிறப்பாக விளையாடி அணியை காப்பாற்றினார்.

வெற்றியின் விளிம்பிற்கு சென்று கைவிட்ட ஜிம்பாப்வே! தொடரை கைப்பற்றிய இலங்கை! 3
Sri Lanka’s Oshada Fernando (R) reaches back to the crease while Zimbabwe’s Regis Chakabva (L) attempts to stump him out as Zimbabwe’s Craig Ervine (C) looks on during the fourth day of the second Test cricket match between Zimbabwe and Sri Lanka at the Harare Sports Club in Harare on January 30, 2020. (Photo by SIMON MAINA / AFP)

இலங்கை 87 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டியை முடித்துக்கொள்ள இரு அணி கேப்டன்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. மெண்டிஸ் 233 பந்துகளை சந்தித்து 116 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றிருந்ததால் தொடரை 1-0 எனக் கைப்பற்றியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *