இதுவும் தரமான சம்பவம் தான்… வெறித்தனமான பந்துவீச்சாளரை குறைவான விலைக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கெய்ல் ஜெமிசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவை பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் இதுவரை 15 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் வழக்கம் போல் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தொடருக்கான மினி ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.
வழக்கம் போல் இந்த வருடத்திற்கான ஏலத்திலும் ஆல் ரவுண்டர்களுக்கே கடும் போட்டி நிலவி வருகிறது. சாம் கர்ரான், பென் ஸ்டோக்ஸ், நிக்கோலஸ் பூரண் போன்ற நட்சத்திர வீரர்கள் பலர் அதிக தொகைக்கு ஏலம் போயினர்.
பென் ஸ்டோக்ஸை அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கெய்ல் ஜெமிசனை மிக குறைவான விலைக்கு ஏலத்தில் எடுத்து அசத்தியுள்ளது.
கடந்த தொடர்களில் பெங்களூர் அணிக்காக 15 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்த கெய்ல் ஜெமிசனை, இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசால்டாக அவரது அடிப்படை விலையான 1 கோடி ரூபாய்க்கே ஏலத்தில் எடுத்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய கெய்ல் ஜெமிசன், 9 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.