இந்திய அணியின் தொடர் தோல்விகளுக்கு இது தான் காரணம்; சுனில் கவாஸ்கர் ஓபன் டாக் !! 1

இந்திய அணி ஐசிசி தொடரால் நடத்தப்படும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் தோல்வியை ஏன் தழுவுகிறது என்ற காரணத்தை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலக கிரிக்கெட் போட்டிகளில் பலமான அணியாக திகழும் இந்திய அணி என்னதான் தரம்வாய்ந்த நட்சத்திர வீரர்களை கொண்ட அணியாக இருந்தாலும் ஐசிசியால் நடத்தப்படும் தொடர்களில் 2013 ஆம் ஆண்டிற்குப் பின் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.

இந்திய அணியின் தொடர் தோல்விகளுக்கு இது தான் காரணம்; சுனில் கவாஸ்கர் ஓபன் டாக் !! 2

மேலும் தற்பொழுது நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய அணி மிக மோசமாக விளையாடி வருகிறது, இதற்கு முக்கிய காரணமாக பலரும் பல விஷயங்கள் பற்றி பேசினாலும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் முக்கியமான காரணத்தை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்ததாவது, இந்திய அணியில் தலை சிறந்த ஆல்ரவுண்டர்கள் இல்லை இதன் காரணமாகத்தான் இந்திய அணி தடுமாறி வருகிறது, 1983, 1985மற்றும் 2011 ஆகிய ஐசிசியால் நடத்தப்பட்ட உலகக் கோப்பை தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம், இந்திய அணியில் இருந்த தலை சிறந்த ஆல்ரவுண்டர் தான்,ஆனால் அது தற்போது இந்திய அணியில் இல்லை.

இந்திய அணியின் தொடர் தோல்விகளுக்கு இது தான் காரணம்; சுனில் கவாஸ்கர் ஓபன் டாக் !! 3

முன்பெல்லாம் பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள் சிறப்பாக பந்து வீசும் திறமையும், பந்துவீச கூடியவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்ய கூடிய திறமையும் படைத்திருந்தார்கள், ஒரு அணியில் 6,7,8 ஆகிய இடங்களில் சிறந்த ஆல்ரவுண்டர் இருக்க வேண்டும், ஆனால் அது இப்போது இல்லை,முன்பு சுரேஷ் ரெய்னா யுவராஜ் சிங் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தனர் இவர்களால் பந்து வீசவும் பேட்டிங் செய்யவும் முடியும், இது இந்திய அணிக்கு மிகப்பெரும் பலமாக இருந்தது.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அணியில் அப்படி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு வீரரும் இல்லை, இதனால் இந்திய அணியின் கேப்டன்களால் வீரர்களை சரியாக பயன்படுத்த முடியவில்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *