இலங்கை அணி நட்சத்திர வீரரான லஹிரு திரிமன்னே மற்றும் தலைமை பயிற்ச்சியாளர் மிக்கி ஆர்தர் ஆகியஇருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டி சில காலம் நடக்காமல் இருந்தது, ஊரடங்கு தளர்வு தளர்த்தப்பட்டது மீண்டும் சர்வதேச போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது, இந்நிலையில் இலங்கை அணி வருகிற பிப்ரவரி 20 வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டிருந்தது.

சமீபமாக நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை வாஷ் அவுட் செய்து வெற்றி பெற்றது, 2013 க்குப்பின் தனது பழைய பார்மை மீண்டும் நிரூபித்த லஹிரு திருமன்னே மிக சிறப்பாக விளையாடினார்.
இந்நிலையில் அவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாக மாறிவிட்டது. இதன் காரணமாக இலங்கை அணியின் அனைத்து வீரர்களுக்கும் கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அவருடன் சேர்த்து இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தருக்கும் கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் கவுன்சில் வெஸ்ட் இண்டீசுக்கு மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் தவிர்க்கலாமாஅல்லது தள்ளிப் போடலாமா என்று யோசித்து வருகிறது, பெரும்பாலும் இந்த போட்டி நடைபெறாது என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துக் கொண்டுள்ளது,,