அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றார் லட்சுமிபதி பாலாஜி

இந்திய அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளரான லட்சுமிபதி பாலாஜி தற்போது அணைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற போவதாக அறிவித்து உள்ளார்.

தற்போது நடந்து கொண்டு இருக்கும் தமிழ் நாட்டு பிரீமியர் லீகில் இருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்து உள்ளார். இவர் தற்போது 35 வயதை கடந்து விட்டார். லட்சுமிபதி பாலாஜி ஒரு காலத்தில் தமிழ் நாட்டின் சிறந்த வேக பந்து வீச்சாளராக திகழ்ந்தார் ஏன் இந்திய அணியின் சிறந்த வேக பந்து வீச்சாளராக கூட திகழ்ந்தார் ஆனால் தற்போது அவருக்கு எந்த போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காமல் போனது.

லட்சுமிபதி பாலாஜி பேசியது :

” நான் தற்போது அனைத்து கிரிக்கெட் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன், ஆனால் நான் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட் என்னை ஓய்வு அடைய விடுவதில்லை ” என்று லட்சுமிபதி பாலாஜி கூறினார்.

லட்சுமிபதி பாலாஜி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2003 – 2004களில் நடந்த போட்டியில் இவர் சிறப்பாக விளையாடினார்.

இவர் சில காயங்களால் போட்டியில் இருந்து வாய்ப்பு கிடைக்காமலேயே போனது இவரின் இந்திய கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் குறுகிய காலம் தான் இருந்தது. இருப்பினும் இவர் தமிழ் நாடு அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்து விளக்கியுள்ளார்.

பாலாஜி முதல் முதலில் 2003இல் தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார் இவர் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் இவர் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 27 விக்கெட்களை எடுத்து உள்ளார். பிறகு இவர் 30 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் அதில் மொத்தம் 34 விக்கெட்களை எடுத்து உள்ளார் அது மட்டும் இல்லாமல் 5 டி 20 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்களை எடுத்து உள்ளார்.

இவர் ஐபிஎல் போட்டிகளில் போட்டிகளில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளில் விளையாடியுள்ளார்.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.