தோனிக்கு நேரம் கொடுங்கள்

முன்னாள் தெனாப்ரிக்க வீரர் லேன்ஸ் குலூஸ்னர் இந்திய வீரர் தோனியின் மீதான தனது கருத்துக்களை கூறியுள்ளார். மேலும் தோனிக்கு சாதகமான தனது நிலைபாட்டயும் வெளிபடுத்தியுள்ளர். அதாவது இந்திய வீரர் மஹேந்திர சிங் தோனி தான் நினைத்ததற்க்கு முன்னதாகவே இந்திய அணியில் இருந்து வெளியேறினால் அது இந்திய அணியில் பெரும் தாக்கத்தையும் இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவையும் ஏற்படுத்தும்.

தோனி யார் ?

தோனி ஒரு நாள் போட்டியில் தனது சராசரியை இன்றும் 50 க்கும் மேல் வைத்திருக்கிரார். அவர் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் நினைக்கும் வரை தொடர்ந்து ஆட வேண்டும். அவரை கட்டாயபடுத்தி ஓய்வுபெற செய்வது இந்திய அணி செய்யும் மிகப்பெரிய முட்டால்தனம் ஆகும். அவர் தற்போது தனது இயல்பான ஆட்டத்தை வெளிபடுத்துவதில் சற்று சிறமப்படுகிறார். அவர் பின்னாளில் இன்னும் சிறப்பாக ஆடக்கூடிய வள்ளமை படத்தவர். அவருக்கு சிறிது நேரம் கொடுங்கள் அவர் இன்னும் சிறப்பாக செயல்படுவார்.

எவர் ஒருவரையும்  எளிதாக வசை பாடலாம், வெளியேற கூறலாம். ஆனால்  அவர் அதற்க்காக எவ்வளவு கடினமாக உழைக்கிறார்  என நமக்கு தெரியாது. – க்லூஸ்னர்

 

தோனிக்கு தற்போது 36 வயது ஆகிறது. அவரை அணியில் இருந்து நீக்க விமர்சகர்களும் கிரிக்கெட் ஆர்வாளர்கலும் அறிவுரித்தி வருகின்றனர். ஆனால் அவரிடம் இன்னும் கிரிக்கெட் ஆடும் திறமையும் உடற்தகுதியும் இருக்கிறது. அவரால் இன்னும் சில ஆண்டு காலம் கூட ஆட முடியும். அவர் தற்போது வரை 296 ஒரு நாள் போட்டிகளும் 77 டி20 போட்டிகளும் ஆடியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். 90 டெஸ்ட்களில் சராசரி 38.09 வைத்திருந்த போது டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

45 வயதான க்லூஸ்னர் அவரது காலத்தில் தென்னாப்பிர்க்க அணியின் முக்கிய அங்கமாக இருந்தவர். தென்னாப்பிரிக்கவின் டர்பனில் பிறந்த அவர் ஜிம்பாப்வே அணிக்கும் பயிச்சியாளராக இருந்துள்ளார்.

யாரும் வந்தவுடன் தோனியாக போவதில்லை, அவர் போல் ஆட அவரால் மட்டும் தான் முடியும். அவருக்கு சிறிது காலம் கொடுங்கள். அவர் அதனை வெல்லுவார். – க்லூஸ்னர்

தற்போது தமிழகத்தில் இருக்கும் லேன்ஸ் க்லூஸ்னர். தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் கோவை அணிக்காக ஆலோசகராக செயல் பட்டு வருகிறார். அவர் ஆலோசகராக செயல்படுவது இது கோவை அனிக்காக இரண்டாவது முறையாகும்.

தோனி இந்திய அணிக்காக பேட்ஸ்மேன், கீப்பர், கேப்டன் என அனைத்தையும் ஒரே நேரத்தில் அழகாக செய்தவர். அவருடைய கேப்டன்சிப்பில் நெருக்கடியான பல நேரங்களில் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதுவரை கிரிக்கெட் விளையாடியவரிகளில் இந்திய வீரர் தோனி மிகச்சிறந்த ஃபினிசர் ஆவார். – க்லூஸ்னர்

மிகத்தரம் வாய்ந்த அணியான இந்தியா தனது முன்னாள் கேப்டன் தோனியை கட்டாயப்படுத்தி ஓய்வு பெற வைத்தால் அது அந்த அணியை தரம் தாழ்த்திவிடும். இப்படியான ஒரு அணி உருவாக உருதுணாயாக இருந்தவர் தோனி என்பதை மறந்து விட கூடாது.

 அவரால் இன்னும் விளையாட முடியும் போது, அவர்  ஏன் ஓய்வு பெற வேண்டும். அவ்வாறு செய்தால் அது இந்திய கிரிக்கெட் வாரியம் செய்யும் மிகப்பெரிய முட்டாள் தனம் ஆகும் – க்லூஸ்னர்

தென்னாபிரிக்கவிற்க்காக 1995 ல் அறிமுகமான க்லூஸ்னர் 49 டெஸ்ட் போட்டிகளில் 1906 ரன்களையும் 80 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒரு நாள் 137 இன்னிங்ஸில் 171 விக்கெட்டுகளையும் 3576 ரன்களையும் எடுத்துள்ளார்.

Editor:

This website uses cookies.