ப்ரேக்கிங் நியூஸ்; இந்த போட்டிக்கு பிறகு கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் முக்கிய வீரர்
இலங்கை கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவரான லசீத் மலிங்கா தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும் இவருக்கு வயது 36. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறியது இலங்கை அணி. இதை யடுத்து அவர் ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் பங்களாதேஷ் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட வந்துள்ளது. இந்த இரு அணிகளுக்கான முதல் போட்டி வரும் 26 ஆம் தேதி நடக்கிறது. இதில் பங்குபெறும் மலிங்கா, அந்தப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இத்தகவலை இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே கொழும்பில் நேற்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘’பங்களாதேஷ் அணியுடன் நடக்கும் முதல் ஒரு நாள் போட்டியோடு ஓய்வு பெறுகிறேன் என்று மலிங்கா என்னிடம் சொன்னார். ஆனால் அணி தேர்வு குழுவிடம் என்ன சொன்னார் என்று தெரியாது’’ என்றார் கருணா ரத்னே.
ஓய்வுக்குப் பிறகு லசீத் மலிங்கா ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.