ஒரு சீசன் இருந்ததுக்கே அவ்ளோ கத்துக்கொடுத்தாரு... தோனி கொடுத்த பவுலிங் டிப்ஸ் வச்சு, உள்ளூர் சீசன்ல 51 விக்கெட்ஸ் எடுத்தேன் - இளம் சிஎஸ்கே வீரர் நெகிழ்ச்சி! 1

கடந்த சீசனில் தோனியிடம் பெற்றுக்கொண்ட சில அறிவுரைகள் எனக்கு உள்ளூர் போட்டிகளில் மிகவும் உதவியது. 51 விக்கெட்டுகளும் வீழ்த்தினேன் என்று நெகிழ்வாக பேசினார் சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டே.

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராகவும் சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும் திகழ்ந்து வந்தவர் மகேந்திர சிங் தோனி. அத்துடன் ஐபிஎல் போட்டிகளிலும் தனது கேப்டன் பொறுப்பின் மூலம் எண்ணற்ற பல சாதனைகளை படைத்தார்.

ஒரு சீசன் இருந்ததுக்கே அவ்ளோ கத்துக்கொடுத்தாரு... தோனி கொடுத்த பவுலிங் டிப்ஸ் வச்சு, உள்ளூர் சீசன்ல 51 விக்கெட்ஸ் எடுத்தேன் - இளம் சிஎஸ்கே வீரர் நெகிழ்ச்சி! 2

பேட்டிங் கீப்பிங் இரண்டிலும் வித்தியாசமான பல டெக்னிக் வைத்திருக்கிறார். குறிப்பாக கீப்பிங்கில் தோனியைப் போன்று மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்யக்கூடிய வீரர் எவரும் இல்லை என்கிற அளவிற்கு புகழ்பெற்றவர்.

ஐபிஎல் போட்டிகளில் கடந்த சில வருடங்களாகவே, போட்டிகள் முடிந்தவுடன் எதிரணி இளம் வீரர்கள் பலருக்கு டிப்ஸ் கொடுப்பது மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது என்று வாடிக்கையாக செய்து வருகிறார்.

ஒரு சீசன் இருந்ததுக்கே அவ்ளோ கத்துக்கொடுத்தாரு... தோனி கொடுத்த பவுலிங் டிப்ஸ் வச்சு, உள்ளூர் சீசன்ல 51 விக்கெட்ஸ் எடுத்தேன் - இளம் சிஎஸ்கே வீரர் நெகிழ்ச்சி! 3

அதேபோல் சிஎஸ்கே அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் போதிய வகையில் வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்றாலும், தோனியிடம் பயிற்சி செய்யும்பொழுது பல்வேறு விஷயத்தை கற்றுக் கொள்கிறோம் என்று பலரும் மகிழ்வாக கூறியுள்ளனர்.

அந்த வகையில் கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்பட்ட இளம் வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே, ஐபிஎல் போட்டிகளின்போது தோனியிடம் கற்றுக் கொண்ட சில அறிவுரைகளை பயன்படுத்தி இந்த வருடம் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதாக தனது பேட்டியில் பகிர்ந்துகொண்டார். அவர் பேசியதாவது:

“தோனி பேட்டிங் டிப்ஸ் மட்டுமே கொடுப்பார் என்று எண்ணியிருந்தேன். ஆனால் கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு நான் எடுக்கப்பட்டதற்கு பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று எண்ணினேன். ஏனெனில் தோனியிடம் பௌலிங் குறித்த பல அறிவுரைகளை பெற்றுக் கொண்டேன். உண்மையில இந்த வருடம் உள்ளூர் கிரிக்கெட் சீசனில் 51 விக்கெட்டுகள் வீழ்த்தியதற்கு தோனி கொடுத்த அறிவுரைகள் மிகவும் உதவியது.

ஒரு சீசன் இருந்ததுக்கே அவ்ளோ கத்துக்கொடுத்தாரு... தோனி கொடுத்த பவுலிங் டிப்ஸ் வச்சு, உள்ளூர் சீசன்ல 51 விக்கெட்ஸ் எடுத்தேன் - இளம் சிஎஸ்கே வீரர் நெகிழ்ச்சி! 4

இந்த வருடமும் தோனியுடன் இணைந்து செயல்படப்போகிறேன் என்று நினைக்கும்பொழுது பெருமிதமாக இருக்கிறது. அவரிடமிருந்து இன்னும் நிறைய கற்றுக்கொள்வேன்.

எந்தநேரம் வேண்டுமானாலும் தயக்கமின்றி தோனியிடம் கேட்கலாம். அந்த அளவிற்கு எங்களை சுதந்திரமாக வைத்திருக்கிறார். வந்த முதல் நாளிலிருந்து தயக்கம் என்பதே இல்லாத அளவிற்கு என்னை போன்ற இளம் வீரர்களுடன் பழகுகிறார். அவர் மீது ஒவ்வொரு நாளும் மரியாதை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நான் சிஎஸ்கே அணியில் இருக்கும் வரை இன்னும் நிறைய தெரிந்துகொள்வேன்.” என்று பெருமிதமாக பேசினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *