ரெய்னா & யுவராஜின் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வுளவு தானா?

இலங்கை தொடரின் போது யுவராஜை நீக்கவில்லை, அவருக்கு ஓய்வு தான் கொடுத்திருக்கோம் என இந்திய அணியின் தேர்வாளர்கள் கூறியதும், ஆஸ்திரேலியா தொடரில் யுவராஜ் சிங் வருவார் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள்.

ஆனால், தேர்வாளர் எம்.ஸ்.கே. பிரசாத் சொன்னதெல்லாம் பொய் என இப்போது தான் தெரிந்தது. இப்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதில், யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னாவின் பெயர்களை குறிப்பிடவில்லை.

இதை எல்லாம் பார்க்கும் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது. இலங்கை தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பிடிக்காத போதே, அது தெரிந்தது. ஆனால், அவருக்கு ஓய்வு தான் கொடுத்துள்ளோம் என தேர்வாளர்கள் சமாளித்தார்கள். துலீப் டிராபி, இலங்கை தொடர், ஆஸ்திரேலியா தொடர் என எந்த தொடரிலும் அவருடைய பெயர் இல்லை. இதில் இருந்தே தெரிகிறது, அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று.

இங்கிலாந்துடன் 150, சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் அரைசதம் என சிறப்பாக விளையாடினார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சோபிக்காத யுவராஜ் சிங், அணியில் மீண்டும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. மனிஷ் பாண்டே, லோகேஷ் ராகுல், அஜின்க்யா ரஹானே என அனைவரையும் இந்திய அணி முயற்சி செய்து வருகிறது, இதில் இருந்தே தெரிகிறது யுவராஜ் சிங்கின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக முடிகிறது என்று.

சுரேஷ் ரெய்னாவின் வாழ்க்கையும் முடிந்தது:

கடந்த சில வருடங்களாகவே இந்திய ஒரு நாள் அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வருபவர் சுரேஷ் ரெய்னா. இதற்க்கு காரணம் அவருடைய உடர் தகுதி இன்மை மற்றும் அணியில் பல திறமையான இளம் வீரர்களின் வருகையாகும்.

ரெய்னா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசியாக ஆஸ்திரேலியாவிற்க்கு எதிராக கடந்த 2014ல் விளையாடி இருந்தாலும், அவர் இப்போதும் ஒருநாள் மற்றும் டி20 போட்டியின் பங்கு பெறும் அணியில் மிக முக்கியமான வீரர் ஆவார். ஆனால் கடந்த வருடங்களாகவே இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் போராடி வருகிறார்.

அணியில் புதிய வீரர்களை முயற்சி செய்து வருகிறார்கள். அவர்கள் ஒருவேளை இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடித்து விட்டால், சுரேஷ் ரெய்னா மீண்டும் இந்திய அணியில் விளையாடுவது சந்தேகம்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.