ராணுவ படையுடன் இணைந்து பணியை தூங்கினார் 'தல'!! 1

ஜம்முவில் உள்ள ஸ்ரீநகரில் தன்னுடைய ராணுவக் பணியை இன்று தொடங்கியுள்ளார் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி.

உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது. அப்போது தோனியின் ஓய்வு முடிவு குறித்த சர்ச்சை எழுந்ததால், அவரின் முடிவுக்காக காத்திருந்தது பிசிசிஐ. தோனி தாமாக முன்வந்து இரண்டு மாதங்கள் ராணுவத்தில் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக கூறினார்.

ராணுவ படையுடன் இணைந்து பணியை தூங்கினார் 'தல'!! 2

இதனால், இவரை கணக்கில் கொள்ளாமல், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். இந்நிலையில், இரண்டு மாதங்கள் காஷ்மீரில் ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற அனுமதி கோரியிருந்தார்.

தோனியின் இந்த கோரிக்கையைப் ஏற்றுக்கொண்ட ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், தோனிக்கு அனுமதி வழங்கினார்.

அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, இன்று காஷ்மீர் ஸ்ரீநகரில் ராணுவ வீரர்களுடன் இணைந்து தனது பயிற்சியை துவங்கினார். இவருக்கு இன்று முதல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

ராணுவ படையுடன் இணைந்து பணியை தூங்கினார் 'தல'!! 3

இன்று (ஜூலை 31) முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை காஷ்மீரில் அவர் பணியில் வீரர்களுடன் இணைந்து ரோந்து பணியிலும் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடவுள்ளார். மேலும் அவருக்குப் பாதுகாப்பிற்காக ஏகே 47 ரக துப்பாக்கியும் வழங்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு, நான்கு ஆர்மி குட்வில் பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களிடம் கலந்துரையாடவுள்ளார் தோனி. ஐந்து உள்ளூர் கிரிக்கெட் அணிகளுடன் கிரிக்கெட் விளையாடவும் முடிவு செய்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *