2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் 25வது போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளும் மோதின. இதில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் தோனி.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு, ரஹானே(14), பட்லர் (23), சாம்சன் (6) மற்றும் ஸ்மித் (15) என அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.
பின்னர் ஸ்டோக்ஸ் (28) ரன்களை எடுத்து அணிக்கு ஆறுதல் அளித்தாலும், ஷ்ரேயாஸ் கோபால் 7 பந்துகளை சந்தித்து 19 ரன்கள் அடிக்க, 20 ஓவர்களில் 7 விக்கெடுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி.
அடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு, வாட்சன் (0), ரெய்னா (4), டு ப்ளஸிஸ் (7) மற்றும் ஜாதவ் (1) என டாப் ஆர்டர் வீரர்கள் சோதப்பினர்.
இந்நேரத்தில், சரியாக வந்த தோனி (58) மற்றும் ராயுடு (57) என சிறப்பாக ஆடி அணியை தேற்றி நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர்.
கடைசி பந்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் தொடரில் 100 வெற்றிகளை பெற்று, இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகள் பெற்றுள்ள டாப் 5 கேப்டன்களை நாம் இங்கு காண்போம்.
#1 எம் எஸ் தோனி – 100 வெற்றிகள்
சென்னை அணி ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணி என்பது அவர்கள் பெற்றிருக்கும் வெற்றியிலேயே தெரிகிறது. 2 வருடங்கள் ஆடவில்லை என்றாலும், 7 முறை இறுதி போட்டிக்கும், அனைத்து முறையும் பிளே ஆப் சுற்றுக்கும் சென்றுள்ளது. 100 வெற்றிகளுடன் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் தோனி.