ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் மகேந்திர சிங் தோனி. ஐபிஎல் தொடரில் 39 போட்டிகளில் பெங்களூரு அணிக்கு எதிராக 7 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் ஐந்து இந்திய வீரர்களின் பட்டியலை இங்கு காண்போம்.
#5 யூசுப் பதான் – 158 சிக்ஸர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகளுக்கு ஆடியுள்ள யூசுப் பதான் 172 போட்டிகளில் 158 சிக்ஸர்கள் அடித்து இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 2018ஆம் ஆண்டிலிருந்து ஆடி வருகிறார்.
#4 விராத் கோஹ்லி – 186 சிக்ஸர்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வரும் விராத் கோஹ்லி இதுவரை 173 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார். இவர் கேப்டன் பொறுப்பில் பெங்களூர் அணிக்காக 5000 ரன்களுக்கு மேல் குவித்து உள்ளார். விராட் கோலி ஐபிஎல் தொடரில் இதுவரை 186 சிக்ஸர்கள் அடித்து இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறார்.
#3 சுரேஷ் ரெய்னா – 190 சிக்ஸர்கள்

சென்னை அணிக்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பாக ஆடிவரும் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர் இதுவரை 185 போட்டிகளில் 190 சிக்ஸர்கள் அடித்து இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்
#2 ரோஹித் சர்மா – 190 சிக்ஸர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரும் ரோஹித் சர்மா, மும்பை அணிக்காக மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதுவரை 182 ஐபிஎல் போட்டிகளில் 190 சிக்ஸர்கள் அடித்து இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
#1 எம் எஸ் தோனி – 203 சிக்ஸர்கள்

சென்னை அணிக்காக சிறப்பாக கேப்டனாக இருந்து வரும் எம் எஸ் தோனி. இதுவரை மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். ஒட்டுமொத்தமாக இந்த சாதனையை இரண்டாவது வீரர் ஆவார். இவருக்கு முன்பாக 300 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெயில் முதல் இடத்தில் நீடிக்கிறார். 184 போட்டிகளில் ஆடியுள்ள எம் எஸ் தோனி 203 சிக்சர்கள் அடித்துள்ளார்.