2017ம் ஆண்டிற்கான ஐசிசி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இந்திய கேப்டன் விராட் கோலி, 2017ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இரண்டாவது முறையாக வென்றார். அதுமட்டுமின்றி, ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர், ஐசிசியின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பொதுவாக ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த வளரும் வீரர் என்று விருதுகள் வழங்கி வருகின்றது. ஆனால், பலரும் ‘டி20-க்கு விருதுகள் தர மாட்டங்க போல’ என நினைக்கின்றனர். அது தவறு. கடந்த 2008ம் ஆண்டு முதல் சிறந்த டி20 வீரருக்கான விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த விருதை முதலில் வென்றவர், நம் யுவராஜ் சிங் தான். இதுவரை இந்த விருது வென்றவர்கள் பட்டியலையும், எதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டது என்ற விவரம் குறித்தும் இங்கே பார்ப்போம். அதுமட்டுமின்றி, 2017ம் ஆண்டிற்கான விருதை வென்றிருப்பதும் ஒரு இந்தியர் தான். அவர் யார் என்பதையும் பார்க்கலாம்.
யுவராஜ் சிங் (ஆறு சிக்ஸர்கள்)
தில்ஷன் (WT20 2009)
மெக்குல்லம் (116 vs ஆஸ்திரேலியா)
டிம் சவுதி (ஹாட்ரிக் vs பாகிஸ்தான்)
ரிச்சர்ட் லெவி (டி20ல் அதிவேக சதம்)
உமர் குல் (5/6 vs தென்னாப்பிரிக்கா)
ஆரோன் ஃபின்ச் (156 vs இங்கிலாந்து)
டு பிளசிஸ் (119 vs வெஸ்ட் இண்டீஸ்)
பிரத்வொயிட் (WT20 இறுதிப் போட்டியில் அடுத்தடுத்து வெற்றிக்கான நான்கு சிக்ஸர்கள்)
யுவேந்திர சாஹல் (6/25 vs இங்கிலாந்து)
யாரை தேடுறீங்க? கிறிஸ் கெயில், டி வில்லியர்ஸ் பெயர்லாம் எங்கனு தானே! அவர்களை விட, அந்த ஆண்டில் மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்த இரண்டு அதிரடி சூரர்களின் பெயர்களும் மிஸ்ஸிங்.
இதில், 2016ல் இந்தியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிப் பெற 19 ரன்கள் தேவை. அந்த இறுதி ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீச, முதல் நான்கு பந்துகளையும் 6,6,6,6 சிக்ஸருக்கு பறக்கவிட்டு தனது அணியை வெற்றிப் பெற வைத்து கோப்பையை வென்றுத் தந்தவர் கார்லஸ் பிரத்வொயிட். ஸோ, அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு.