கூடாரத்தில் தங்கியும், பாணி பூரி விற்றும் பிழைப்பு நடத்திய சிறுவன் இந்தியா அண்டர் 19 அணியில் இடம்பிடித்துள்ளார். 1

பாணி பூரி விற்றும், குடிசையில் தங்கியும் தனது கிரிக்கெட் கனவை நனவாக்கிய 17 வயது மும்பை சிறுவன் யாசஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது அண்டர் 19 இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

யாசஸ்வி ஜெய்ஸ்வால் 11வயது சிறுவனாக இருக்கும் பொழுது, பால் வியாபாரம் செய்யும் கடையில் தங்கி வந்துள்ளார். சில காரணத்திற்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின், வேறு இடமின்றி தவித்த பொழுது, முஸ்லீம் ஒருங்கிணைந்த மைதானம் மும்பையில் உள்ளது, அதன் மைதான பாதுகாவலர் மற்றும் பராமரிப்பாளர் உடன் மூன்று வருடங்கள் தங்கி அவ்வப்போது கிரிக்கெட் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார்.

கூடாரத்தில் தங்கியும், பாணி பூரி விற்றும் பிழைப்பு நடத்திய சிறுவன் இந்தியா அண்டர் 19 அணியில் இடம்பிடித்துள்ளார். 2

மும்பை அண்டர் 19 அணியின் பயிற்சியாளர் சமத், யாசஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி கூறுகையில், 6 வருடங்கள் பின்பு தற்போது 17 வயதாகும் யாசஸ்வி ஜெய்ஸ்வால் நடு ஆர்டர்களில்  இறங்கி சிறப்பாக ஆடி வருகிறார். ஆட்டத்தின் யுக்திகளையும், கடினங்களையும் புரிந்து ஆடுகிறார் என தெரிவித்தார்.

யாசஸ்வி ஜெய்ஸ்வால் பின்னணி பற்றி..

யாசஸ்வி ஜெய்ஸ்வால் தந்தை சிறுகடை ஒன்றை உத்திரபிரதேசத்தில் நடத்தி வந்துள்ளார். ஆனால், யாசஸ்வி ஜெய்ஸ்வால் கிரிக்கெட் பயிற்சிக்காக உத்திரபிரதேசத்தில் இருந்து மும்பை வந்துள்ளார். தந்தையின் குடும்பம் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட போதிலும், இவரின் கிரிக்கெட் ஆசைக்கு தந்தை எந்தவித முட்டுக்கட்டை போடவில்லை.

அதனால், மாமாவுடன் மும்பை சென்ற யாசஸ்வி ஜெய்ஸ்வால், மாமாவின் வீடு மிகவும் சிறியது என்பதால், மைதானத்திலேயே தங்கி வந்துள்ளார். முஸ்லீம் ஒருங்கிணைந்த மைதானத்தின் மேலாளர் யாசஸ்வி ஜெய்ஸ்வாலின் மாமா தான். அதனால் மேலிடத்தில் பேசி அங்கு தங்க அனுமதியும் பெற்று தந்துள்ளார்.

மும்பையில் யாசஸ்வி ஜெய்ஸ்வால் வாழ்க்கை.. 

ஆசாத் மெய்டன் மைதானத்தில், முஸ்லீம் ஒருங்கிணைந்த கிளப் டென்டில் தங்கியுளேன். இங்கு அடிப்படை வசதியான கழிவறை கூட இருக்காது. அருகிலுள்ள தெரு காலைவரை தான் உபயோகிக்க வேண்டும். இரவு நேரங்களில் மிகவும் அவதியாக இருக்கும்.

மைதானத்தில் டென்ட் கட்டி தாங்கும் பொழுது மிகவும் கடினம், இரவு நேரங்களில் பூச்சிகள் வரும், பகலில் மிகவும் வெப்பமாக இருக்கும். மேலும், உணவுக்கும் மிகவும் கஷ்ட பட்டிருக்கிறேன். காலை நேரம் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. மதியம் இரவு நேரம் ரொட்டி செய்து சாப்பிடுவேன்.

மைதான பராமரிப்பாளருடன் தான் தங்கியுள்ளேன். அவரும் நானும் தான் சாப்பிடுவோம். உணவுக்காக மூத்த வீரர்களுடன் விளையாடி கிடைக்கும் 200-300 ரூபாய்களை வைத்து சாப்பிடுவேன். ராம் லீலா நிகழ்வின் பொது பாணி பூரி செய்து விற்று கிடைக்கும் பணத்தில் வேண்டியதை வாங்கிக்கொள்வேன்.

அப்பொழுது என்னுடைய நண்பர்கள் கடைக்கு வந்துவிட கூடாது என வேண்டிகொள்வேன், அவர்களுக்கு கொடுப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். என்னை கேவலமாக பார்ப்பார்களா என்ற எண்ணம் தான் வரும்.

அவ்வப்போது தந்தை பணம் அனுப்புவார். ஆனால், அது ஒன்று இரண்டு நாட்களுக்கே சரியாக இருக்கும். மேலும், நான் தந்தையை கஷ்டப்படுத்த விரும்பவில்லை என வருந்தி கூறினார்.

பயிர்ச்சியாளர் சமத், யாசஸ்வி ஜெய்ஸ்வால் பந்துவீச்சாளர்களை கணித்து ஆடக்கூடியவர், மற்ற வீரர்கள் எடுத்தவுடன் பெரிய ஷாட்களை ஆடி பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்து அடித்து ஆட முயற்சிப்பர். ஆனால், யாசஸ்வி ஜெய்ஸ்வால் அப்படி அல்ல. நிதானமாகவும், தேவையான நேரத்தில்  சரியாக அடித்தும், களத்தில் நீண்ட நேரம் நீடித்து நின்றும் ஆட கூடியவர்.

இவருக்கு வரும் காலத்தில் இந்தியாவில் நீடித்த இடம் இருக்கிறது. பீதியை அணிக்காக பெருமை சேர்க்கும் அளவிற்கு சிறப்பாக ஆடுவார் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என கூறினார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *