205 ரன்கள் எடுத்தும் தோல்வியடைந்தது மிகப்பெரும் கேவலம்; டிவில்லியர்ஸ் வேதனை !! 1
205 ரன்கள் எடுத்தும் தோல்வியடைந்தது மிகப்பெரும் கேவலம்; டிவில்லியர்ஸ் வேதனை

சென்னை அணியுடனான போட்டியில் 205 ரன்கள் குவித்த போதிலும் தோல்வியடைந்தது மிகப்பெரும் அசிங்கம் என்று பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 24-வது லீக் ஆட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டி காக் (53), டி வில்லியர்ஸ் (68) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.

205 ரன்கள் எடுத்தும் தோல்வியடைந்தது மிகப்பெரும் கேவலம்; டிவில்லியர்ஸ் வேதனை !! 2

பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அம்பதி ராயுடு (53 பந்தில் 82 ரன்கள்), டோனி (34 பந்தில் 70 ரன்கள் அவுட்டில்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 19.4 ஓவரில் 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டில் அசத்தல்  வெற்றி பெற்றது.

205 ரன்கள் எடுத்தும் தோல்வியடைந்தது மிகப்பெரும் கேவலம்; டிவில்லியர்ஸ் வேதனை !! 3

200 ரன்களுக்கு மேல் அடித்தும் தோல்வியை சந்தித்ததால், ஆர்சிபி அணிக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன டி வில்லியர்ஸ் இந்த தோல்வி பேரழிவு என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான தோல்வி குறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த போட்டியை எப்படி தோற்றோம்?. இரண்டு இன்னிங்சிலும் முதல் 15 ஓவர்களில், நாங்கள் வலுவான எதிரணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஆனால், எங்களுடைய இன்னிங்ஸ் இறுதியில் தோல்வியை சந்தித்தோம்.

205 ரன்கள் எடுத்தும் தோல்வியடைந்தது மிகப்பெரும் கேவலம்; டிவில்லியர்ஸ் வேதனை !! 4

இந்த தொடரின் தொடக்கத்தில் நாங்கள் முழு நம்பிக்கையாக இருந்தோம். இது ஒவ்வொருவருக்கும் இடையில் நம்பிக்கையை வளரச் செய்தது. பயிற்சியாளர் வெட்டோரி எங்களிடம் பேசுகையில் அமைதியான நின்று, அவநம்பிக்கையுடன், 205 ரன்கள் அடித்தும் தோல்வியடைந்தது உண்மையிலேயே பேரழிவு என்று உணர்ந்தோம். அதன்பின் எந்த வகையில் சரியாக சென்றோம். எந்த வகையில் தவறாக சென்றோம் என்பதை விராட் கோலி கண்டறிந்தார்.

குறிப்பிட்ட பகுதியில் நாங்கள் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதை சரி செய்து கொல்கத்தாவிற்கு எதிராக நாளை சரியான திசையில் செல்ல வேண்டும்’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *