பவுலிங்கில் கெத்துக்காட்டிய சுட்டிக்குழந்தை சாம் கர்ரன்... கேஎல் ராகுல் அபாரம், மற்ற வீரர்கள் சோதப்பல்.. லக்னோ அணி 159 ரன்கள் அடித்தது! 1

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் அடித்துள்ளது. பந்துவீச்சில் அசத்திய சாம் கர்ரன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வரும் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு துவக்க வீரர்களாக கைல் மேயர்ஸ் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.

பவுலிங்கில் கெத்துக்காட்டிய சுட்டிக்குழந்தை சாம் கர்ரன்... கேஎல் ராகுல் அபாரம், மற்ற வீரர்கள் சோதப்பல்.. லக்னோ அணி 159 ரன்கள் அடித்தது! 2

கேஎல் ராகுல் வழக்கம் போல நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். கைல் மேயர்ஸ் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக அடித்துவர அதை பஞ்சாப் பவுலர்கள் நீடிக்க விடவில்லை. 23 பந்துகளில் 29 ரன்கள் அடித்திருந்தபோது, ஹர்ப்ரித் பிரார் இவரது விக்கட்டை தூக்கினார்

அடுத்து வந்த தீபக் ஹூடா 2 ரன்கள், க்ருனால் பாண்டியா 18 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். கடந்த போட்டியில் லக்னோ அணிக்கு நாயகனாக திகழ்ந்த நிக்கோலஸ் பூரன், இப்போட்டியில் வந்த முதல் பந்தலிலேயே ரபாடா ஓவரில் அவுட் ஆனார். ஸ்டாய்னிஷ் 15 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

வரிசையாக விக்கெடுகளை இழந்து கொண்டே இருந்ததால் லக்னோ அணியால் பெரிதளவில் ஸ்கோர் அடிக்க முடியவில்லை. மறுமுனையில் நின்று கொண்டு அணிக்கு பக்கபலமாக விளையாடி வந்த கேஎல் ராகுல் அரைசதம் கடந்தார். சற்று நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த பிறகு, தன்னுடைய அதிரடியை ஆரம்பித்தார்.

பவுலிங்கில் கெத்துக்காட்டிய சுட்டிக்குழந்தை சாம் கர்ரன்... கேஎல் ராகுல் அபாரம், மற்ற வீரர்கள் சோதப்பல்.. லக்னோ அணி 159 ரன்கள் அடித்தது! 3

அதற்குள் அர்ஷதிப் சிங் சரியான நேரத்தில் கேஎல் ராகுல் விக்கெட்டை தூக்கினார். 56 பந்துகளில் 76 ரன்கள் அடித்து கேஎல் ராகுல் ஆட்டமிழந்து வெளியேற, கடைசியில் வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களுக்கு அவுட் ஆகியதால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே லக்னோ அணியால் அடிக்க முடிந்தது.

பஞ்சாப் அணிக்கு பந்துவீச்சில் கலக்கிய சாம் கர்ரன் 3 விக்கெட்டுகளும், ரபாடா இரண்டு விக்கெட்டுகளும் கைபற்றினர். சிக்கந்தர் ராசா, ஹர்பிரீட் பிரார், மற்றும் அர்ஷதீப் சிங் மூவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

பவுலிங்கில் கெத்துக்காட்டிய சுட்டிக்குழந்தை சாம் கர்ரன்... கேஎல் ராகுல் அபாரம், மற்ற வீரர்கள் சோதப்பல்.. லக்னோ அணி 159 ரன்கள் அடித்தது! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *