இவ்வளவு திமிரு வேண்டாம் தம்பி... இளம் வீரரை எச்சரித்த மேத்யூ ஹைடன் !! 1

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பாராக்கிர்க்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துவக்க வீரர் மேத்யூ ஹைடன் அறிவுரை வழங்கியுள்ளார்.

2022 ஐபிஎல் தொடருக்கான 63 வது லீக் போட்டி லக்னோ மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. இரண்டு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக கருதப்பட்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 178/6 ரன்கள் அடித்து லக்னோ அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது.

இந்த சவாலான இலக்கை நோக்கி சேஸ் செய்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 154/8 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

இவ்வளவு திமிரு வேண்டாம் தம்பி... இளம் வீரரை எச்சரித்த மேத்யூ ஹைடன் !! 2

என்னதான் இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக் செய்த செயலால் அவர் உட்பட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

லக்னோ அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் 19.2 ஓவரில் மார்கஸ் ஸ்டாய்நிஸ் அடித்த பந்தை மிக அற்புதமாக கெட்ச் பிடித்த ரியான் பராக் அதனை கொண்டாடும் வகையில் பந்தை தரையில் படுமாறு வைத்து சிரித்தார்,அந்த செயல் அம்பயற்களின் தவறான முடிவை கேலி செய்யும் வகையில் இருந்தது.

என்னதான் அம்பயர்கள் சில நேரங்களில் தவறான முடிவை அறிவித்தாலும், அவர்களுக்கான மரியாதை கொடுக்க வேண்டும் என்று ரியான் பராக்கை பலரும் கடுமையாக விமர்சித்தன. அறிவுரை வழங்கியும் வருகின்றனர்.

இவ்வளவு திமிரு வேண்டாம் தம்பி... இளம் வீரரை எச்சரித்த மேத்யூ ஹைடன் !! 3

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக்கிர்க்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அதில்,“இந்த அறிவுரைகள் உங்களுக்கானது தான் வாலிபனே (ரியான் பராக்), கிரிக்கெட் என்பது ஒரு நீண்ட நெடிய விளையாட்டாகும், அதில் எங்களைப் போன்றோருக்கு நெடிய நினைவுகள் உள்ளது, நீங்கள் ஒருபோதும் விதியை மயக்க முடியாது, ஏனென்றால் அது கூடிய விரைவிலேயே வந்துவிடும் என்று மேத்யூ ஹைடன் அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *