2வது டி20 போட்டியால் வந்த வினை.. லக்னோ பிட்ச்சை ரெடி பண்ணியவருக்கு தண்டனை கொடுத்தது பிசிசிஐ! என்ன நடந்தது? 1

லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தை பராமரித்து வருபவருக்கு தண்டனை கொடுத்திருக்கிறது பிசிசிஐ.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 போட்டிகள் நடந்து முடிந்துவிட்டது. இதன் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருக்கின்றது. மூன்றாவது டி20 போட்டி அகமதாபாத் மைதானத்தில் வருகிற பிப்ரவரி 1ம் தேதி நடைபெற உள்ளது.

2வது டி20 போட்டியால் வந்த வினை.. லக்னோ பிட்ச்சை ரெடி பண்ணியவருக்கு தண்டனை கொடுத்தது பிசிசிஐ! என்ன நடந்தது? 2

இந்நிலையில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி மிகவும் சொற்ப ரன்கள் அடிக்கப்பட்ட போட்டியாக அமைந்துவிட்டது. இரு அணிகளும் நூறு ரன்களை எட்டுவதற்கு படாதபாடு பட்டனர் ஆகையால் இந்த பிட்ச் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

லக்னோ மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் வெறும் 99 ரன்கள் மட்டுமே அடித்தது. 100 ரன்கள் இலக்கை சேஸ் செய்த இந்திய அணி, அதை எட்டுவதற்கு 19.5 ஓவர்கள் எடுத்துக் கொண்டது. பேட்ஸ்மன்கள் எவராலும் சரியாக பந்தை கணித்து விளையாட முடியவில்லை.

2வது டி20 போட்டியால் வந்த வினை.. லக்னோ பிட்ச்சை ரெடி பண்ணியவருக்கு தண்டனை கொடுத்தது பிசிசிஐ! என்ன நடந்தது? 3

இரு அணிகளும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 39.5 ஓவர்களில் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படாதது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டாலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரிடம் பல்வேறு கேள்விகள் அடுக்கப்பட்டன.

அதற்கு பதில் கொடுத்த அவர், “போட்டியை பற்றி என்னிடம் கேளுங்கள் பிட்ச் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். அந்த விஷயத்தில் இந்திய அணி எந்தவித தலையீடும் செய்யவில்லை. முழுக்க முழுக்க மைதானத்தின் பராமரிப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் இருவரும் தான் அதற்கு பொறுப்பு. அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என பேசினார்.

லக்னோ மைதானத்தின் மீது வந்த பல்வேறு விமர்சனங்களின் எதிரொலியாக அதன் பராமரிப்பாளராக இருந்து வந்த சுரேஷ் குமார் என்பவரை பணிநீக்கம் செய்திருக்கிறது உத்திரபிரதேச கிரிக்கெட் வாரியம். இதற்கு பிசிசிஐ தலையிடும் இருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது. மேலும் புதிய மேற்பார்வையாளராக சஞ்சீவ் அகர்வால் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

2வது டி20 போட்டியால் வந்த வினை.. லக்னோ பிட்ச்சை ரெடி பண்ணியவருக்கு தண்டனை கொடுத்தது பிசிசிஐ! என்ன நடந்தது? 4

இதன் பிறகு லக்னோ மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் மட்டுமே நடக்க உள்ளது. வரும் ஐபிஎல்லில் 9 போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டிகளின் போது லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு இது ஹோம் மைதானமாக இருக்கிறது. கௌதம் கம்பீர் லக்னோ அணிக்கு ஆலோசகராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *