டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் லயனுக்கு 8வது இடம்

வங்காள தேசம் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமநிலைப் பெற்றது.

டாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வங்காள தேசம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்டகாங்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் முதல் டெஸ்டில் 9 விக்கெட்டும், 2-வது டெஸ்டில் 13 விக்கெட்டும் வீழ்த்தினார். 2-வது டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது பெற்ற அவர், தொடர் நாயகன் விருதை வார்னர் உடன் இணைந்து கைப்பற்றினார்.

சிறப்பாக செயல்பட்டதால் டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் முதல் முறையாக 10 இடத்திற்குள் வந்துள்ளார் லயன்.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன் நாதன் லயன் 17-வது இடத்தில் இருந்தார். தற்போது 9 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் 12-வது இடத்தை பிடித்ததுதான் இவரது சிறந்த தர வரிசையாக இருந்தது.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா முதல் இடத்திலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது இடத்திலும், அஸ்வின் 3-வது இடத்திலும் உள்ளனர்.

இரண்டு டெஸ்டிலும் சதம் அடித்த வார்னர் ஒரு இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 6-வது இடத்திற்கு சறுக்கியுள்ளார்.

ஐசிசி அணிகளுக்கான டெஸ்ட் தரவரிசை (அணிகள் & மதிப்பீடு):

1. இந்தியா – 125
2. தென்னாபிரிக்கா – 110
3. இங்கிலாந்து – 105
4. நியூஸிலாந்து – 97
5. ஆஸ்திரேலியா – 97
6. பாகிஸ்தான் – 93
7. இலங்கை – 90
8. வெஸ்ட் இண்டீஸ் – 75
9. வங்கதேசம் – 74
10. ஜிம்பாப்வே- 0

பேட்ஸ்மேனுங்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசை:

1. ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)
2. ஜோ ரூட் (இங்கிலாந்து)
3. கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து)
4. செதேஸ்வர் புஜாரா (இந்தியா)
5. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)
6. விராட் கோலி (இந்தியா)
7. அசார் அலி (பாகிஸ்தான்)
8. அலெஸ்டர் கூக் (இங்கிலாந்து)
9. ஹசிம் ஆம்லா (தென்னாபிரிக்கா)
10. லோகேஷ் ராகுல் (இந்தியா)

பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசை:

1. ரவீந்திர ஜடேஜா (இந்தியா)
2. ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து)
3. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா)
4. ரங்கனா ஹெராத் (இலங்கை)
5. ஜோஷ் ஹெசல்வுட் (ஆஸ்திரேலியா)
6. காகிஸோ ரபாடா (தென்னாபிரிக்கா)
7. டேல் ஸ்டெய்ன் (தென்னாபிரிக்கா)
8. நாதன் லயன் (ஆஸ்திரேலியா)
9. வெர்னோன் பிலாண்டர் (தென்னாபிரிக்கா)
10. ஸ்டுவர்ட் ப்ரோடு (இங்கிலாந்து)

ஆல்-ரவுண்டர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசை:

1. ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்)
2. ரவீந்திர ஜடேஜா (இந்தியா)
3. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா)
4. மொயின் அலி (இங்கிலாந்து)
5. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
6. வெர்னோன் பிலாண்டர் (தென்னாபிரிக்கா)
7. மிட்சல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)
8. ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்திய தீவு)
9. ரங்கனா ஹெராத் (இலங்கை)
10. ஸ்டுவர்ட் ப்ரோடு (இங்கிலாந்து)

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.