கரீபயன்களை சமாளிக்குமா இந்திய படை..? இன்றைய போட்டியில் வெல்லப்போவது இந்த அணி தான்
இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள்இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் லாடர்ஹில் நகரில் அமைந்துள்ள சென்ட்ரல் புரோவர்ட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்யத்தவறிய (அரை இறுதியுடன் வெளியேற்றம்) இந்திய அணி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பையை நோக்கி பயணிக்கும் வகையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி 20 தொடரில் களமிறங்குகிறது.
குறுகிய வடிவிலான தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அகமது, நவ்தீப் சைனி உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதேவேளையில் இந்தத் தொடர்களில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தொடருக்கான அணியில் ஓரங்கட்டப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே ஆகியோருக்கு மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்தும் முயற்சியில் இந்திய அணி நிர்வாகம் களமிறங்கியுள்ளதால் ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே ஆகியோர் வரவிருக்கும் 6 ஆட்டங்களிலும் ( 3 டி 20, 3 ஒருநாள் போட்டி) உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இவர்கள் இருவருமே மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற தொடரில் சிறந்த திறனை வெளிப்
படுத்திய நிலையில்தான் சீனியர்அணிக்குள் மீண்டும் நுழைந்துள்ளனர். இதனால் கிடைக்கும் வாய்ப்பை இவர்கள் சரியாக பயன்
படுத்துக் கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும். எனினும் அணிச் சேர்க்கையை கருத்தில் கொண்டு விளையாடும் லெவனில் இவர்
களில் யாராவது ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர், இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ஆகியோர் மீதும் சற்று எதிர்பார்ப்பு உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வேகப் பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெறக்கூடும்.

லாடர்ஹில் மைதானத்தில் இந்தியா – மே.இ.தீவுகள் 2-வது முறையாக டி 20-ல் மோதுகின்றன. கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி இந்த மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 246 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி ஒரு ரன்னில் தோல்வியடைந்திருந்தது. இந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல் 46 பந்துகளில் சதம் விளாசியிருந்தார்.