உசைன் போல்ட்டை விட டோனி வேகமாக செயல்படுபவர் என ரசிகர் ஒருவர் டுவிட்டரில் கூறியதற்கு மஹேல ஜெயவர்தனே கிண்டலாக பதில் அளித்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தனே டுவிட்டரில் தனது கருத்துக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், தடகள வீரர் உசைன் போல்ட் வேகத்தை புகழும் வகையில் அவர் மீது தனக்கு பெரிய மரியாதை உண்டு என ஜெயவர்தனே டுவீட் செய்தார்.
அவர் டுவிட்டுக்கு கீழே ரசிகர், உசைன் போல்ட்டை விட இந்திய கிரிக்கெட் வீரர் டோனி வேகமாக செயல்படுபவர் என கூறினார்.
இதற்கு கிண்டலாக பதில் பதிவு செய்த ஜெயவர்தனே, டோனி அவர் பைக்கில் வேகமாக போவதை பற்றி சொல்கிறீர்களா என பதிவிட்டுள்ளார்.
மஹேல ஜெயவர்தனே தன் ட்விட்டர் பக்கத்தில் தோனியை கலாய்த்ததை நீங்களே பாருங்கள் :
தற்போது இது இணையத்தளங்களில் வேகமாக பரவி கொண்டு வருகிறது.
இதற்க்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆன தோனி பதிலுக்கு இன்னும் எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிட்ட தக்கது.