2023 ஐபிஎல்லில் வரவுள்ள 3 புதிய ரூல்ஸ்... டாஸ் போட்ட பிறகும் டீம் சேஞ்ச் பண்ணலாம்! 1

நடைபெற உள்ள 2023 ஐபிஎல் சீசனில் புதிதாக மூன்று விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது ஐபிஎல் நிர்வாகம்.

ஐபிஎல்-ன் 16ஆவது சீசன் வருகிற மார்ச் 31ஆம் தேதி துவங்கி மே மாதம் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த வருட சீசன் துவங்குவதற்கு இன்னும் பத்து நாட்களுக்கும் குறைவாகவே இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஐபிஎல் நிர்வாகமும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

2023 ஐபிஎல்லில் வரவுள்ள 3 புதிய ரூல்ஸ்... டாஸ் போட்ட பிறகும் டீம் சேஞ்ச் பண்ணலாம்! 2

கொரோனா காலகட்டத்தில் வைரஸ் பரவலை தடுப்பதற்காக வெகு சில மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டது. ஆனால் இந்த வருடம் மீண்டும் பழைய முறைப்படி, ஒரு போட்டி சொந்த மைதானத்திலும் மற்றொரு போட்டி வெளி மைதானத்திலும் நடக்கும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

சர்வதேச அணியில் விளையாடி வரும் வீரர்களை தவிர, மற்ற வீரர்கள் தங்களது ஐபிஎல் அணிகளுடன் இணைந்து பயிற்சியை துவங்கிவிட்டனர். குறிப்பாக மகேந்திர சிங் தோனி 20 நாட்களுக்கு முன்னரே சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்தடைந்து தனது பயிற்சியை துவங்கி விட்டார்.

2023 ஐபிஎல்லில் வரவுள்ள 3 புதிய ரூல்ஸ்... டாஸ் போட்ட பிறகும் டீம் சேஞ்ச் பண்ணலாம்! 3

கடந்த இரண்டு வருடங்களை விட இந்த வருடம் ஐபிஎல் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்து வரும் நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஐபிஎல் நிர்வாகமும் தொழில்நுட்பம் மற்றும் கேளிக்கைகள் ரீதியாக நவீனத்தை பயன்படுத்தியுள்ளது. அதேநேரம் இன்னும் ஆர்வத்தை தூண்டுவதற்கு புதிதாக மூன்று விதிமுறைகளை கொண்டு வந்திருக்கிறது.

அதில் முதலாவது மற்றும் கவனிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் விதிமுறை, ஐபிஎல் போட்டிகளில் டாஸ் போடப்பட்ட பின்பும் அணிகள் தங்களது பிளேயிங் லெவனை மாற்றிக்கொள்ளலாம்.

2023 ஐபிஎல்லில் வரவுள்ள 3 புதிய ரூல்ஸ்... டாஸ் போட்ட பிறகும் டீம் சேஞ்ச் பண்ணலாம்! 4

இரண்டாவதாக, கீப்பர் மற்றும் ஃபீல்டர் பேட்ஸ்மேனுக்கு அசவுகரியமாக நடந்துகொண்டால், டெத்-பால் என்று அறிவிக்கப்பட்டு, 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும்.

மூன்றாவதாக, அணிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை என்றால், தாமதமாக வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கும் 30-யார்டு வட்டத்திற்கு வெளியே 4 வீரர்கள் மட்டுமே நிற்பதற்கு அனுமதிக்கப்படும்.

இந்த மூன்று விதிமுறைகளையும் பார்க்கையில் மைதானத்திற்குள் இரு அணிகளின் வீரர்கள் மத்தியில் எந்தவித சலசலப்பும் இருக்காது மற்றும் உரிய நேரத்திற்குள் இன்னிங்ஸ்கள் முடிக்கப்படும் என்று தெளிவாகத் தெரிகிறது. அதைக்கொண்டு வரவே இத்தகைய விதிமுறைகளை பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் இணைந்து வகுத்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *