சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நிகழ்த்திய சாதனைகளை நாம் எங்கு காண இருக்கிறோம்.
1. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் எடுத்த ஒரே பந்துவீச்சாளர் லசித் மலிங்கா. 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இதனை நிகழ்த்தினார்.

2. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த ஒரே பந்துவீச்சாளர் லசித் மலிங்கா. 2007-ல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக, 2011ஆம் ஆண்டு கென்யா அணிக்கு எதிராக மற்றும் ஆஸ்திரேலியா அணிகக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை மலிங்கா வீழ்த்தியுள்ளார்.
3. உலகக்கோப்பையில் 2 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த வீரர் மலிங்கா மட்டுமே. 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக, 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் கென்யா அணிக்கு எதிராக.

4. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 338 விக்கெட்டுகளுடன் 9வது இடத்தில் உள்ளார் மலிங்கா. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மூன்றாவது இலங்கை வீரர் ஆவார்.
5. ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை ஓர் ஆட்டத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில் மலிங்கா உள்ளார். மலிங்கா இதனை 8 முறை நிகழ்த்தியுள்ளார்.
6. ஒருநாள் போட்டிகள் அரங்கில் மலிங்கா 11 முறை நான்கு விக்கெட்டுகள் எடுத்தார்.