மீண்டும் பட்டையை கிளப்பிய இங்கிலாந்து! வெஸ்ட் இண்டீஸ் திணறல்! 1

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஜூலை 24 அன்று தொடங்கியுள்ளது. இந்த டெஸ்டை டிரா செய்தால் விஸ்டன் கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி தக்கவைத்துக் கொள்ளும். இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடரை 2-1 என வென்றுவிடும். அயர்லாந்துடனான ஒரு டெஸ்ட் தொடரைத் தவிர்த்துப் பார்த்தால் கடந்த 5 டெஸ்ட் தொடர்களில் ஒன்றில் மட்டும் தான் இங்கிலாந்து அணி வென்றுள்ளது. அதனால் அந்த அணிக்கு இந்த வெற்றி மிக முக்கியமானதாக உள்ளது.

மீண்டும் பட்டையை கிளப்பிய இங்கிலாந்து! வெஸ்ட் இண்டீஸ் திணறல்! 2
MANCHESTER, ENGLAND – JULY 25: Stuart Broad of England plays a shot for six during Day Two of the Ruth Strauss Foundation Test, the Third Test in the #RaiseTheBat Series match between England and the West Indies at Emirates Old Trafford on July 25, 2020 in Manchester, England. (Photo by Michael Steele/Getty Images)

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. எனினும் 2-வது டெஸ்டை 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இங்கிலாந்து அணி. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய பென் ஸ்டோக்ஸ், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதனால் டெஸ்ட் தொடர் 1-1 சமனில் உள்ளது. 3-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுகிறது.

டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அல்ஸாரி ஜோசப்புக்குப் பதிலாக ரகீம் கார்ன்வெல் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், பிராட், ஆர்ச்சர், வோக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

மீண்டும் பட்டையை கிளப்பிய இங்கிலாந்து! வெஸ்ட் இண்டீஸ் திணறல்! 3
MANCHESTER, ENGLAND – JULY 24: Jos Buttler of England celebrates his half century during Day One of the Ruth Strauss Foundation Test, the Third Test in the #RaiseTheBat Series match between England and the West Indies at Emirates Old Trafford on July 24, 2020 in Manchester, England. (Photo by Gareth Copley/Getty Images for ECB)

இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 85.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. போப் 91, பட்லர் 56 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போப், 91 ரன்களில் கேப்ரியல் பந்துவீச்சில் போல்ட் ஆனார். விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ ஆரம்பித்தன. வோக்ஸ், ரோச் பந்துவீச்சில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். Stuart Broad and James Anderson were at their best as they got rid of the West Indian top order in no time. (Reuters Photo)இது ரோச்சின் 200-வது டெஸ்ட் விக்கெட் ஆகும். நன்கு விளையாடி 67 ரன்கள் எடுத்த பட்லர், கேப்ரியல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆர்ச்சர் 3 ரன்கள் எடுத்து ரோச் பந்துவீச்சில் வீழ்ந்தார். பிராட் நன்றாக விளையாடி 45 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அணிக்கு மிகவும் உதவினார்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 111.5 ஓவர்களில் 369 ரன்கள் எடுத்துள்ளது. மே.இ. தீவுகள் அணியின் ரோச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *