MELBOURNE, AUSTRALIA - FEBRUARY 22: AB de Villiers of South Africa and MS Dhoni of India speak as they wait during the 2015 ICC Cricket World Cup match between South Africa and India at Melbourne Cricket Ground on February 22, 2015 in Melbourne, Australia. (Photo by Robert Prezioso-IDI/IDI via Getty Images)

இவரைப்பார்த்து கிரிக்கெட் ஆட கற்றுக்கொள் – இளம் வீரருக்கு டி வில்லியர்ஸ் கொடுத்த அட்வைஸ்! அது சச்சின், தோனி இல்லையாம்!

இவரை பார்த்து எப்படி ரன்கள் அடிக்க கற்றுக்கொள் என பெங்களூரு அணியில் இருக்கையில் டி வில்லியர்ஸ் அறிவுரை கூறியதாக இளம் வீரர் மந்தீப் சிங் மனம் திறந்து பேசியுள்ளார்.

பஞ்சாப் கிரிக்கெட் வீரர் மன்தீப் சிங் கடந்த 2010ல் நடந்த ஐ.பி.எல். தொடரில் கோல்கட்டா அணிக்காக விளையாடிய இவர், 2011 முதல் 2014ஆம் ஆண்டு வரை பஞ்சாப் அணி சார்பில் பங்கேற்றார். பின், 2015 முதல் 2018ஆம் ஆண்டு வரை பெங்களூரு அணியில் இடம் பிடித்திருந்த இவர், கடந்த சீசனில் மீண்டும் பஞ்சாப் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார்.

இவரைப்பார்த்து கிரிக்கெட் ஆட கற்றுக்கொள் - இளம் வீரருக்கு டி வில்லியர்ஸ் கொடுத்த அட்வைஸ்! அது சச்சின், தோனி இல்லையாம்! 1

இதற்கிடையில் இந்த ஊரடங்கு காலத்தில் பெங்களூரு அணிக்காக கோஹ்லி, டிவிலியர்ஸ் ஆகியோருடன் இணைந்து விளையாடிய அனுபவம் குறித்து மன்தீப் சிங் மனம்திறந்து பேசினார்.

“ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடியது மகத்தானது. இதனை என்றும் மறக்க முடியாது. நான் மட்டும் தான் கடின உழைப்பாளி என்று நினைத்தேன். ஆனால் கோஹ்லியை பார்த்த பின்பு தான், எனது உழைப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று உணர்ந்தேன்.

இவரைப்பார்த்து கிரிக்கெட் ஆட கற்றுக்கொள் - இளம் வீரருக்கு டி வில்லியர்ஸ் கொடுத்த அட்வைஸ்! அது சச்சின், தோனி இல்லையாம்! 2
Royal Challengers Bangalore captain Virat Kohli, Royal Challengers Bangalore player AB De Villiers and Royal Challengers Bangalore player Mandeep Singh after the eliminator match of the Pepsi IPL 2015 (Indian Premier League) between The Royal Challengers Bangalore and The Rajasthan Royals held at the MCA International Stadium in Pune, India on the 20th May 2015.
Photo by: Sandeep Shetty / SPORTZPICS / IPL

இவர், உடற்பயிற்சியில் நீண்ட நேரம் செலவிடமாட்டார். மாறாக, பேட்டிங் திறனை மேம்படுத்த பெரும் பாடுபடுவார். எனது அம்மா, கிரிக்கெட் போட்டிகளை அதிகமாக பார்க்கமாட்டார். ஆனால் அவர் என்னிடம் கோஹ்லியை போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும் எதிர்பார்த்தார்.

கோஹ்லி ஒவ்வொரு போட்டியிலும் நிறைய ரன் சேர்க்க விரும்பக்கூடியவர். இதனை ஒருபோதும் சமரசம் செய்யமாட்டார். இவரிடம் இருந்து கிரிக்கெட் குறித்த விஷயங்களை நிறைய கற்றுக் கொண்டேன். ஒரு முறை டிவிலியர்ஸ் என்னிடம் வந்து, ‘அதிக ரன்கள் சேர்ப்பது எப்படி என்பதை கோஹ்லியை பார்த்து கற்றுக் கொள்’ என ஆலோசனைவழங்கியிருக்கிறார்.” என மன்தீப் சிங் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *