பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்; ரசிகர்கள் மகிழ்ச்சி !! 1

பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்; ரசிகர்கள் மகிழ்ச்சி

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் வரும் 24ம் தேதி(நாளை மறுநாள்) தொடங்குகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 25ம் தேதி வரை நடக்கவுள்ளது.

உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரேவில், தமிழ்நாடு, மும்பை, டெல்லி, கர்நாடகா, ஹைதராபாத், ஆந்திரா, குஜராத், சவுராஷ்டிரா, பெங்கால், அருணாச்சல பிரதேசம், இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, ஜம்மு காஷ்மீர், பரோடா, ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், மேகாலயா, விதர்பா ஆகிய அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன.

 

பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்; ரசிகர்கள் மகிழ்ச்சி !! 2
Seasoned Mandeep Singh will lead the 13-member Punjab squad in the Vijay Hazare Trophy, starting at Baroda from September 25. Gurkeerat Singh Mann has been appointed his deputy.

இந்த தொடருக்கான பஞ்சாப் அணியின் கேப்டனாக மந்தீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். குர்கீரத் சிங் மன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்களான அபிஷேக் ஷர்மா, பிரப்சிம்ரான் சிங், அன்மோல் மல்ஹோத்ரா, மயன்க் மார்கண்டே ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். அனுபவ ஃபாஸ்ட் பவுலர் சித்தார்த் கவுலும் அணியில் உள்ளார்.

விஜய் ஹசாரே தொடருக்கான பஞ்சாப் அணி:

மந்தீப் சிங்(கேப்டன்), குர்கீரத் சிங் மன்(துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, பிரப்சிம்ரன் சிங்(விக்கெட் கீப்பர்), ஷரத் லம்பா, ரமன் தீப் சிங், அன்மோல் மல்ஹோத்ரா(விக்கெட் கீப்பர்), சித்தார்த் கவுல், சந்தீப் ஷர்மா, பல்தேஜ் சிங், மயன்க் மார்கண்டே, கரன் கைலா, அகுல் பர்தாப்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *