அஸ்வின் செய்தது சரியா..? என்ன சொல்கிறார் ஐ.பி.எல் தலைவர் ராஜிவ் சுக்லா !! 1

அஸ்வின் செய்தது சரியா..? என்ன சொல்கிறார் ஐ.பி.எல் தலைவர் ராஜிவ் சுக்லா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் பஞ்சாப் அணியின் அஸ்வின் அவுட்டாக்கியது சரியா தவறா என கிரிக்கெட் ஜாம்பவான்கள் உள்ளிட்ட பலர் கருத்து தெரித்துள்ளனர்.

ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜெய்ப்பூரில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீழ்த்தியது.

இதில் முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் 79 ரன்களும், இளம் வீரர் சர்பராஸ் கான் 46 ரன்கள் எடுத்தனர்.

அஸ்வின் செய்தது சரியா..? என்ன சொல்கிறார் ஐ.பி.எல் தலைவர் ராஜிவ் சுக்லா !! 2

இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வந்த வேகத்தில் வெளியேறினாலும், மறுமுனையில் ஜாஸ் பட்லர் தனி ஒருவனாக பந்துவீச்சை அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தார்.

போட்டியின் 13-வது ஓவரை அஸ்வின் வீசியபோது நான்-ஸ்ட்ரைக்கில் நின்றிருந்த ஜோஸ் பட்லர், பந்துவீசுவதற்கு முன்பே கிரீசை விட்டு வெளியேறியதால் சாமர்த்திமாக செயல்பட்ட அஸ்வின், அவரை ரன்-அவுட் செய்தார்.

கிரிக்கெட் விதிமுறைப்படி பந்துவீச, செய்கை காட்டுவதற்கு முன், நான்-ஸ்டிரைக்கர் வெளியே சென்றால் ரன் அவுட் செய்யலாம். ஆனால் அஸ்வின் செயல் குறித்து சமூக வலைதளத்தில் இருவேறு கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன.

அஸ்வின் செய்தது சரியா..? என்ன சொல்கிறார் ஐ.பி.எல் தலைவர் ராஜிவ் சுக்லா !! 3

கிரிக்கெட் ரசிகர்கள் மட்டமல்லாமல், முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் , கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் அஸ்வின் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சிலர் அஸ்வின் செய்தது சரி தான், பட்லர் தான் கவனித்து விளையாடி இருக்க வேண்டும் என்றும் சிலர் அஸ்வினின் இந்த செயல் ஜெண்டில்மேன் விளையாட்டு என போற்றப்படும் கிரிக்கெட்டிற்கே தலைகுனிவு என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அஸ்வினின் இந்த செயல் குறித்து ஐ.பி.எல் தலைவர் ராஜிவ் சுக்லாவின் ட்வீட் இங்கே;

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *