ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் காயம்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று உள்ளூர் கிரிக்கெட் தொடரின் போது ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையில், இரு அணிகள் இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியிலும் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
முதல் போட்டியில் வெற்றியின் அருகில் வரை வந்த ஆஸ்திரேலிய அணி, நூழிலையில் வெற்றியை தவறவிட்டதற்கு மார்கஸ் ஸ்டோனிஸ் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாததே மிக முக்கிய காரணம் என்று முன்னாள் ஜாம்பவான் சேன் வார்னே போன்ற பலரால் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதன் எதிரொலியாக டி.20 தொடரில் இந்திய அணிக்கு சவாலாக இருந்த ஸ்டோனிஸ் டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றாலும் ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என ஆஸ்திரேலிய ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது மார்கரஸ் ஸ்டோனிஸிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளையாடி வரும் ஸ்டோனிற்கு கனுக்கால் பகுதியில் ஏற்பட்டுள்ளது.
மருத்துவர்கள் பரிசோதனையிலும், ஸ்கேன் ரிப்போர்ட்டிலின் ஸ்டோனிஸிற்கு ஏற்பட்டுள்ள காயம் உறுதியாக தெரிந்தாலும் தன்னால் முடங்கி கிடக்க முடியாது, தன்னால் சிறப்பாக பந்துவீச முடியும் என ஸ்டோனிஸ் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஸ்டோனிஸ், காயம் ஏற்பட்ட கடந்த சனிக்கிழமை எனது வாழ்வில் மிகவும் மோசமான தினம். காயத்தில் இருந்து மிக விரைவில் மீண்டு வருவேன் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. என்னால் இந்த காயத்துடனும் சிறப்பாக விளையாட முடியும், இருந்தாலும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சில நாட்கள் ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளேன்” என்றார்.