வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் சாமுவேல் அனைத்து விதமான போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

39 வயதான வெஸ்ட் இண்டீஸ் அணியை சார்ந்த ஆல்ரவுண்டர் ஆன மார்லன் சாமுவேல்ஸ் தனது கிரிக்கெட் கேரியரை 2000 ஆண்டு தொடங்கி 2018 வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடினார். இவருடைய அதிரடியான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 1979க்கு பிறகு இதுவரை இரண்டு டி 20 உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இவரின் அதிரடியான பேட்டிங் ஆகும்.
2012 இல் இலங்கைக்கு எதிரான இறுதி போட்டியில்56 பந்துகளில் 78 ரன்கள் அடித்து கோப்பையை கைப்பற்ற உதவினார், அதேபோன்று 2016 நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 66 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து வெஸ்டின்டிஸ் கோப்பையை வெல்ல உதவினார். மேலும் அந்த இரு போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
மார்லன் சாமுவேல்ஸ் இதுவரை 71 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 207 ஒருநாள் போட்டிகள் மற்றும் 67 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 3917 ரன்களும் அதில் ஏழு சதங்களும், 24 அரை சதமும் அடங்கும், ஒருநாள் போட்டிகளில் 5606 களும் அதில் 10 சதங்களும் , 30 அரை சதங்களும் அடங்கும், மற்றும் டி20 போட்டிகளில் 1611 ரன்கள் அதில் 10 அரை சதங்களும் அடங்கும். இவர் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி இடம் பதித்துள்ளார்.