சர்வதேச டெஸ்ட் தொடரின் தலைசிறந்த பேட்ஸ்மேனான ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மார்னஸ் லபுசென் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பொழுது, தான் எதிர்கொண்ட கடினமான மூன்று பந்துவீச்சாளர்கள் குறித்து பேசியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு அறிமுகமான மார்னஸ் கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடர் வரை முப்பத்தி எட்டு இன்னிங்சில் பங்கேற்று 2171 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.

என்னதான் மார்னஸ் 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமானாலும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்திர்க்கு ஏற்பட்ட காயத்திற்கு மாற்று வீரராக களம் இறங்கிய பின் தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டதற்கு பிறகுதான் ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் தொடருக்கான ரெகுலர் வீரராக களமிறக்கப்பபடுகிறார்.அதற்கு முன்பு இவருக்கு அந்த அளவிற்கு விளையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

அறிமுகமாகிய சில ஆண்டுகளிலேயே சர்வதேச டெஸ்ட் தொடருக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதன்மை வீரராக இருக்கும் மார்னஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தான் எதிர்கொண்ட 3 சவாலான பந்துவீச்சாளர்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில், அவர் முதல் பந்து வீச்சாளராக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், அடுத்ததாக இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவி அஸ்வின் மற்றும் மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜாப்ரா அற்செர் ஆகிய மூன்று பந்து வீச்சாளர்களும்தான் நான் எதிர்கொண்டதிலேயே மிகவும் சவாலான பந்துவீச்சாளர்கள் என்று மர்னஸ் லபுசென் பேசியுள்ளார்.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டியில் மார்னஸ் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவி அஸ்வினிடம் இரண்டு முறை தனது விக்கெட்டை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது