விராட் கோலி ஸ்டீவ் ஸ்மித் இருவரில் யார் மிகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆஸ்திரேலிய வீரர் ஓபன் டாக்
தற்காலத்தில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் ஆக இருப்பவர்கள் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித். இருவருமே அனைத்து விதமான போட்டிகளிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள். இதில் குறிப்பாக விராட் கோலி டி20 டெஸ்ட் என அனைத்துவிதமான போட்டிகளிலும் 50க்கு மேல் சராசரி வைத்திருக்கிறார்.
ஸ்டீவன் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் மிக அபாரமாக ஆடி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். விராட் கோலியை எடுத்துக்கொண்டால் ஒரு நாள் போட்டிகளில் முதல் இடத்திலும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டாமிடத்தையும் அலங்கரித்துக் கொண்டு இருக்கிறார்.
எப்படிப் பார்த்தாலும் இருவரும் சமமான வீரர்கள் தான் இருந்தாலும் இருவரில் யார் மிகச்சிறந்த வீரர் என்று அவ்வப்போது முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் தங்களது தேர்வை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷானே இருவரில் யார் மிகச்சிறந்த வீரர் என்று கூறியுள்ளார். அவர் கூறுகையில்..
இருவருமே மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் தான். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவன் ஸ்மித் தான் மிகச்சிறந்த வீரர். எந்த ஒரு நாட்டிலும் ரன் எப்படி குறைப்பது என்று அவர் கண்டுபிடித்து விட்டார். இது தான் அவரை மிகச்சிறந்த வீரராக மாற்றியுள்ளது.
அதனால்தான் அவர் உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இந்தியாவிலும், இங்கிலாந்திலும் எப்படி ரன் அடிக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். ஆஸ்திரேலியாவில் சொல்லவே தேவையில்லை அற்புதமாக ஆடுவார் .

அவருக்கு எந்த இடத்தில் ஆடுகிறோம் என்பதெல்லாம் முக்கியமல்ல, எளிதாக எங்கு ஆடினாலும் இருக்கிறார் அவர்தான் டெஸ்ட் கிரிக்கெட் டில் மிகச்சிறந்த வீரர் என்று கூறியுள்ளார் மார்னஸ் லபுஷானே…