இந்திய வேகப்பந்து வீச்சு முன்னர் போல் இல்லாமல் தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் தோனியின் தலைமையில் பேட்டிங்கை மட்டுமே வைத்து போட்டிகளை வெல்வார். ஆனால் விராட் கோலியின் தலைமையில் அது எல்லாம் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.
சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை அணியில் அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கெல்லாம் ஆக்ரோஷம் என்றால் என்ன என்பதை கற்றுக் கொடுத்தார். அவர்களுக்கு அதிக சுதந்திரம் அளித்து கடுமையாக போராட வைத்தார். இதன் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தற்போது உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக இருக்கின்றனர்.
ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, இஷாந்த் ஷர்மா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் என அனைவரும் பட்டையை கிளப்புகின்றனர். ஒவ்வொரு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது சற்று கடினமான விஷயமாக தான் இருந்து வருகிறது.
சென்ற வருடம் கூட ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 4 வேகப்பந்து வீச்சாளர்களும் பட்டையை கிளப்பி தொடரை வென்று கொடுத்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷானே எந்த இந்திய பந்துவீச்சாளரை எதிர் கொள்வது மிகவும் சிரமம் என்பது பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில்..

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவருமே நல்ல வீரர்கள். ஆனால் ஜஸ்பிரித் பும்ராவை எதிர் கொள்வது மிகவும் கடினம். தொடர்ந்து 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசுவதில் வல்லவர். அதேநேரத்தில் அவரது பந்து வளைந்து செல்லும். சூழ்நிலைக்கு ஏற்றவாறும் பந்து வீசுவார். ஒவ்வொரு பந்தும் ஒருவிதமாக நமக்கு உள்ளே வந்து செல்லும். இதன் காரணமாக அவரது பந்தை எதிர் கொள்வது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார்.