ஆஸ்திரேலிய அணியின் இளம் அதிரடி வீரர் லபுஷேன் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்து அசத்தியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார், இதனால் ஆஸ்திரேலிய அணி இளம் வீரரான லபுசேனுக்கு ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவனில் வாய்ப்பளித்தது, இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட லபுஷேன் அடுத்தடுத்த சதங்களை அடித்து ஆஸ்திரேலிய அணியின் தனக்கான ஒரு இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
ஆனால் ஸ்மித்தின் வருகைக்கு பிறகு லபுஷேன்க்கு ஆஸ்திரேலிய அணியில் அவ்வளவாக இடம் கிடைக்காது என்று எதிர்பார்த்த நிலையிலும் ஆஸ்திரேலிய அணி இவரை டெஸ்ட் தொடரில் ரெகுலர் வீரராக விளையாட வைத்து வருகிறது.
இந்த நிலையில் தற்பொழுது அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் சதம் அடித்ததன் மூலம் பகலிரவு டெஸ்ட் போட்டியில் மார்னஸ் 3 சதங்களை அடித்துள்ளார்.இதனால் பகலிரவு டெஸ்ட் போட்டியில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான டெஸ்ட் போட்டியில் 6 சதங்கள் அடித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் சதத்தை சமன் செய்துள்ளார். வளர்ந்து வரும் வீரராக பார்க்கப்படும் லபுஷேன் தற்போது வெளியிடப்பட்ட டெஸ்ட் தொடருக்கான சிறந்த பேட்ஸ்மேன்கள் என்ற ஐசிசி தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இவரை உலக கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்
தற்பொழுது நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பகலிரவு ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.