சர்வதேச டி20 தொடரில் 3000க்கும் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பட்டியலில் நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் மார்டின் கப்தில் இடம்பெற்றுள்ளார்
உலக கோப்பை தொடருக்கான போட்டி துபாய் அமீரகத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இதில் நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான 32 போட்டி துபாய் மைதானத்தில் இன்று நடைபெற்றது அந்த போட்டியில் நியூசிலாந்து அணி ஸ்காட்லாந்து அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் மார்டின் கப்தில் 56 பந்துகளில் 93 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்ந்தார். மேலும் இந்த போட்டியின் பிளேயர் ஆப் தி மேட்ச் பட்டத்தையும் மார்டின் கப்தில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வென்றுள்ளார். மேலும் நியூசிலாந்து அணி பலமுறை தடுமாறிய நிலையில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் பல வெற்றிகளை நியூசிலாந்து அணிக்கு இவர் பெற்றுக் கொடுத்துள்ளார்.
மேலும் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் விராட் கோலியின் சாதனையை நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் மார்டின் கப்டில் நிறைவு செய்துள்ளார்.

டி20 தொடரில் மூவாயிரத்திற்கும் அதிகமான ரன்களை அதிவேகத்தில் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முன்னிலையில் உள்ளார். விராட் கோலி இதுவரை சர்வதேச டி20 தொடரில் 92 போட்டிகளில் பங்கேற்று 3225 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.
மேலும் இதே சாதனையை நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் மார்ட்டின் கப்தில் 105 போட்டிகளில் பங்கேற்று 3065 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார், அதில் 2 சதங்களும் 7 அரை சதங்களும் அடங்கும், மேலும் சர்வதேச டி20 தொடரில் அதிகமான சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை மார்டின் கப்தில் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.