பஞ்சாப் அணியை மிரளவைத்த ஏபி டிவில்லியர்ஸ்!! 202 ரன்கள் குவித்தது பெங்களூரு அணி!! 1

ஐபிஎல் தொடரின் 42வது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள பெங்களூரு அணியும் ஐந்தாவது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பெங்களூர் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய பார்த்திவ் படேல் மற்றும் கேப்டன் விராட் கோலி இருவரும் துவக்கத்தில் சற்று தடுமாறினார். விராட் கோலி 8 பந்துகளில் 13 ரன்கள் அடித்து முகமது சமி பந்தில் மந்திப் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பவர் பிளே ஓவர்களில் பவுண்டறிகளாக அடித்து விளாசிய பார்த்தீவ் பட்டேல், துரதிஷ்டவசமாக அரை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். இவர் 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பஞ்சாப் அணியை மிரளவைத்த ஏபி டிவில்லியர்ஸ்!! 202 ரன்கள் குவித்தது பெங்களூரு அணி!! 2

மொயின் (4), அக்ஷ்டீப் நாத் (3) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 4 விக்கெட்டுகளை இழந்து மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது பெங்களூரு அணி.

ஆனால் சற்றும் அசராத ஏபி டி வில்லியர்ஸ் மட்டும் ஸ்டாயினிஸ் இருவரும் துவக்கத்தில் சற்று நிதானத்தை வெளிப்படுத்தினாலும், பின்னர் தங்களது இயல்பான அதிரடியில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை பவுண்டரிகளாக விளாசினர்.

நிதானமாக ஆடிய ஏபி டி வில்லியர்ஸ் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார் அதன் பிறகு பந்தை சிக்சருக்கு பறக்க விட 44 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

அதேபோல் மறுமுனையில் எப்படிஏபி டிவில்லியர்ஸ் சப்போர்ட் செய்த ஸ்டாயினிஸ் விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டார்.

பஞ்சாப் அணியை மிரளவைத்த ஏபி டிவில்லியர்ஸ்!! 202 ரன்கள் குவித்தது பெங்களூரு அணி!! 3

முதல் இன்னிங்சில் இருபதாவது ஓவரை வீச வந்த வில்லோஜனை நன்கு பதம் பார்த்தது இந்த ஜோடி. 6, 1, 4, 6, 4, 6 என நாளா புறமும் பந்தை சிதறவிட 20வது ஓவரில் மட்டும் 27 ரன்கள் அடித்தது.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது பெங்களூரு அணி.

202 ரன்கள் என்ற இமாலய இலக்கினை துரத்தி பிடிக்குமா பஞ்சாப் அணி என்பதை பொறுத்திருந்து காண்போம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *