கடைசி நேரத்தில் காட்டடி அடித்த டேவிட் மில்லர்... டி காக், வாண்டர் டூசன் சதம்; 357 ரன்கள் குவித்தது தென் ஆப்ரிக்கா !! 1
கடைசி நேரத்தில் காட்டடி அடித்த டேவிட் மில்லர்… டி காக், வாண்டர் டூசன் சதம்; 357 ரன்கள் குவித்தது தென் ஆப்ரிக்கா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 32வது போட்டியில் நியூசிலாந்து அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் மோதி வருகின்றன.

புனேவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு அந்த அணியின் கேப்டனான டெம்பா பவுமா 24 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.

கடைசி நேரத்தில் காட்டடி அடித்த டேவிட் மில்லர்... டி காக், வாண்டர் டூசன் சதம்; 357 ரன்கள் குவித்தது தென் ஆப்ரிக்கா !! 2

இதன்பின் கூட்டணி சேர்ந்த டி காக் – ரசி வாண்டர் டூசன் ஜோடி, பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி தேவைக்கு ஏற்ப ரன்னும் சேர்த்தது.

கடந்த போட்டிகளை போன்றே இந்த போட்டியிலும் உலகத்தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய குவிண்டன் டி காக், இந்த போட்டியிலும் சதம் அடித்து பல சாதனைகள் படைத்துவிட்டு மொத்தம் 114 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

கடைசி நேரத்தில் காட்டடி அடித்த டேவிட் மில்லர்... டி காக், வாண்டர் டூசன் சதம்; 357 ரன்கள் குவித்தது தென் ஆப்ரிக்கா !! 3

டி காக் விக்கெட்டை இழந்த பின்பும் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரசி வாண்டர் டூசன் 118 பந்துகளில் 133 ரன்கள் எடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார். கடைசி ஐந்து ஓவர்களில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து மளமளவென ரன் குவித்த அதிரடி நாயகன் டேவிட் மில்லர் 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்ரிக்கா அணி 357 ரன்கள் குவித்துள்ளது.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக டி சவுத்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டிரண்ட் பவுல்ட் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *