பென் ஸ்டோக்ஸின் போராட்டம் வீண்... இங்கிலாந்தை கெத்தாக வீழ்த்தி வெறும் கையுடன் வீட்டுக்கு அணுப்பியது ஆஸ்திரேலியா !! 1
பென் ஸ்டோக்ஸின் போராட்டம் வீண்… இங்கிலாந்தை கெத்தாக வீழ்த்தி வெறும் கையுடன் வீட்டுக்கு அணுப்பியது ஆஸ்திரேலியா !!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 36வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இங்கிலாந்து அணியும் மோதின.

அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பென் ஸ்டோக்ஸின் போராட்டம் வீண்... இங்கிலாந்தை கெத்தாக வீழ்த்தி வெறும் கையுடன் வீட்டுக்கு அணுப்பியது ஆஸ்திரேலியா !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக லபுசேன் 71 ரன்களும், கேமிரான் க்ரீன் 47 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் அதிகபடமாக கிரிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், அடில் ரசீத் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பென் ஸ்டோக்ஸின் போராட்டம் வீண்... இங்கிலாந்தை கெத்தாக வீழ்த்தி வெறும் கையுடன் வீட்டுக்கு அணுப்பியது ஆஸ்திரேலியா !! 3

இதன்பின் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி  களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டேவிட் மாலன் 50 ரன்களும், நீண்ட நேரம் போராடிய பென் ஸ்டோக்ஸ் 64 ரன்களும், மொய்ன் அலி 42 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காமல் விக்கெட்டையும் இழந்து வெளியேறியதால் 48.1 ஓவரில் 253 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பென் ஸ்டோக்ஸின் போராட்டம் வீண்... இங்கிலாந்தை கெத்தாக வீழ்த்தி வெறும் கையுடன் வீட்டுக்கு அணுப்பியது ஆஸ்திரேலியா !! 4

பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், ஹசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *